உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் - 23

யல்லாமல் 6 வானத்திற் பறப்பது யாங்ஙனம்? என்று இன்னோரன்ன கேள்விகளைக் கேட்பராயின், அவற்றிற் கெல்லாம் அச் சைவர் விடைகூற இயலாமல் விழிக்கின்றனர்.

க்

ற்

அவன்

இன்னும், எல்லா உலகங்களின் படைப்புக்கும் ஏதுவாகி யிருக்கின்ற புள்ளிவடிவினதாகிய விந்துவும் வரிவடிவினதாகிய நாதமுஞ் சேர்ந்த சேர்க்கையே ஓங்காரமாகும். இந்த ஓங்காரத்தில் விளங்கும் முதல்வன் படைப்புக்கு முந்திய தோற்றமுடையனாய், விந்துநாதச் சேர்க்கையாற் பிறந்த முதலோசையில் முனைந்து நிற்பவனாகலின், விந்துநாதங்களை இயக்கிநிற்கும் அம்மையப்பருக்கு மூத்தபிள்ளை போல்வனாதலைத் தெரித்தற்கே, ஓங்காரம் போன்ற முகவடிவினையுடைய யானை யினுருவினை மேற்கொண்டு அம்மையப்பர் சேர்ந்த சேர்க்கையினின்றும் யானைமுகக் கடவுள் தோன்றினா ரென்னும் ஒரு புராணக்கதை வரைந்துவைக்கப்பட்டது. இக் கதையின் உண்மை இதுவாதலை உணராத சைவரிற் சிற்றறிவினார், திருக்கைலாயத்தின் சுவரிலே வரைந்திருந்த யானையின் உருவினைக் கண்டு சிவபிரான் காமங் காழ்ப்பேற அதுகண்ட பிராட்டி தான் பெட்டையானையின் வடிவினை எய்தலும், பெருமான் களிற்றியானையின் உருவுகொண்டு அதனொடு புணர்ந்தனனாக யானை முகத்தினையுடைய ய மூத்தபிள்ளையார் தோன்றினார்; இந்நிகழ்ச்சி உண்மையே யாகுமென நம்பி உரை நிகழ்த்துவர். இவ்வுரையினைக் கேட்ட மற்றைச் சமயத்தவர் 'நுங்கடவுள் மக்கள் தேவரினும் இழிந்த யானையின் உருவையெடுத்துப் புணர்ச்சி செய்ய விழைந்த அத்துணை இழிந்த காமம் உடையரோ! எனவும், 'தன் முகத்தை அழகிய தேவ வடிமாகத் திருத்திக்கொள்ள மாட்டாமல், மக்களினுந் தாழ்ந்த யானையின் முகவடிவமாகவே அமர்ந்திருந்த பிள்ளையார், யானையினுஞ் சிறந்த மக்களைத் திருத்துவது எங்ஙனம்? எனவும் வினாவி நகையாடா நிற்பர். இவ்வாறே முருகக் கடவுளின் பிறப்பைக் கூறுங் கதைகளும், அவர் சூரபன்மனோடு எதிர்த்துப் போராடினரெனக் கூறுங் கதைகளும்; சிவபிரானையும் அம்மையையும் பற்றியெழுந்த ஏனைக் கதைகளும் எல்லாம் உண்மையில் நிகழ்ந்தன அல்ல; அக் கதைகளெல்லாம் சைவசித்தாந்த நுண்பொருள்களை

6

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/171&oldid=1588604" இலிருந்து மீள்விக்கப்பட்டது