உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 2

201

வளவானே அச் சூரன் சாம்பராய்ப் போதல் திண்ணமன்றோ? ஆதலால், அவனைத் தொலைத்தற் பொருட்டு வடக்கிருந்து L படைதிரட்டி வந்த முருகன் என்பான் முருகக் கடவுளை வழிபடும் ஓர் அடியவனே யன்றி அவனே அம் முருகக் கடவுள் ஆகானென்று கடைப்பிடிக்க

ல்

அற்றேற், பரிபாடல் கூறும் முருகன் பிறப்பினுக்கு வழிவிடுமாறு யாங்ஙனமெனின்; இந்திரன் எனப் பெயர் பூண்ட அரிய அரசன் ஒருவன், சிவபிரான் பெயர்பூண்ட தமிழ்மன்னன் ஆற்றல் மிக்கவனாய் இருத்தல் ஓர்ந்து, அத் தமிழ்மன்னன் கால்வழியற்றுப் போதலுக்கு ஒரு சூழ்ச்சி செய்து, அவன் றனக்குப் பிறந்த ஆண்மகவை அவனே வெட்டிச் சிதைக்குமாறு புரிந்துவிட,அத் தமிழ்மன்னனால் தனது உடம்பில் ஆறு இடங்களில் வெட்டுப்பட்டு ஒரு மலைச்சுனையில் எறிந்துவிடப்பட்ட அம்மகவு தமிழ் முனிவர்கள் அறுவராற் கண்டெடுக்கப்பட்டு, அம்முனிவரின் மனைவியர் அறுவரால் வளர்க்கப்பட்டு வளர்ந்து பெரியனாகித், தனக்குக் கேடுசூழ்ந்த இந்திரனாகிய அவ்வாரிய அரசனை வலிதொலைத்துப், பின்னர்த் தன் றந்தையினால் ஏற்றுக் கொள்ளவும் பட்டுத் தனது அரசைக் கைக்கொண்டு, அதன்பிற் றெற்குநோக்கிப் போந்து சூர்மாவினை வென்றமையே அக் கதையின் மெய்ப்பொருளா மென்க. இங்ஙனம் அல்லாக்கால், ஒவ்வோர் உடம்பிலும் ஒவ்வோர் உயிர் உடை யவனாய் வளர் ர்ந்த பிள்ளைகள் அறுவரும் ஒட்டி ஒரே உயிருடைய ஒரு பிள்ளையாய் ஆறுமுகங்களும் பன்னிரு கைகளுமுடைய முருகவேள் எஞ்ஞான்றும் அழிவு படாதுள்ள ஒவ்வொரு தனிமுதலேயா மென்றும் ஓர் உயிர் மற்றோர் உயிராக மாறுதல் எஞ்ஞான்றும் எவ்விடத்தும் இல்லையென்றும், ஓர் உயிர் எடுக்கும் உடம்பு அது தனக்குள்ள வினைக் கீடாக வருவதாய் அது தனக்கே யுரியதாவதல்லது அது மற்றோர் உயிர்க்கு உரியதாதல் செல்லா தென்றும் வலியுறுத்திச் சொல்லுஞ்” சைவசித்தாந்த உண்மையை நுணுகி யாராய வல்லார்க்கு, அறுவேறு யாக்கைகள் உடைய அறுவேறு பிள்ளைகள் ஒன்றுகூடி ஆறுமுகங்களும் பன்னிருகைகளுமுடைய ஒரு முருகவேள் ஆயினவென்னும் வரலாறு அவ்வரசனின் மிகுந்த ஆற்றலைக் குறிக்கும் ஒரு புனைந்துரைவகையே யல்லாமல் இயற்கைக்கு மாறாகும். அஃது

ஆதல் யாங்ஙனம்? ஒவ்வோர் உயிரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/210&oldid=1588658" இலிருந்து மீள்விக்கப்பட்டது