உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

203

கைக்கொண்டு போதரும் படிற்றொழுக்க முறையாம். ஆரியர் தம்மை உயர்த்தித்தேவர் எனவும், ஏனைத் தமிழரைத் தாழத்தித் 'தாசர்' 'தஸ்யூக்கள்', ‘அசுரர்கள்' எனவும் பேசாநிற்பர். அவர்கள் தாம் செய்துபோந்த வெறியாட்டு வேள்விகளுக்குத் தமிழ்மக்களும் தமிழ்அரசர்களும் இசைந்து வராமை கண்டே அவர்களை அங்ஙனம் வறுப்பதும் இகழ்வதுஞ் செய்வாராயினர். தமிழ் மன்னர்களிற் சிலர் ஆரியருடைய ய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்தமை பற்றியே, அத்தமிழ் மன்னர்களில் வேறு சிலரை அவர்க்குப் பகைவராய்த் தூண்டிவிட்டு, அவர்களுள்ளேயே ஒருவரோ டொருவர் போர்புரிந்து மடியுமாறு செய்துவந்தனர். உயிர்களிடத்து அருளிரக்கமுடைய எவர்க்குத்தாம் ஆரியர் தம் உயிர்க்கொலை வேள்விகள் அருவருப்பினை விளைவியா! பண்டு தொட்டே தமிழ்மக்களுட் சிறந்தார் “கொலை கடிந்தும் புலவுநீக்கியும்” வாழ்பவராகலின், அவர்கள் ஆரியர் வேட்டு வந்த புலைத்தொழில் வேள்விகளை வெறுத்தல் இயல்பேயாம். இதனாலன்றோ தமிழ்நாட்டிற் குடியேறிய ஆரியப் பார்ப்பனர் வேள்வி வேட்டலை இஞ்ஞான்றும் அறவே யொழித்துத், தமிழர் கைக்கொண்ட புலாலுண்ணார் சைவநோன்பினைத் தாமுந் தழீஇ அவராற் பாராட்டப்டுவாராயினர்! இவ்வியல் பினராம் ஆரியர் வடநாட்டுத் தமிழ்வேந்தனாகிய முருக ே வளைத் தம்மவர்க்குப் படைத்தலைவனாய் அமர்த்திக் கொண்டுபோந்து, தென்கடற் கண் இலங்கையில் அரசுபுரிந்த சூரனை எதிர்த்து அவனைஅவனால் மடிவித்தது அவர் தம் இயற்கைக்கு ஒத்ததேயாம் என்க.

இனி, இங்ஙனஞ் சூரனை மாய்த்த முருகவேள் சைவ சமயத்தவனாய்த் தமிழர்க்குரிய சிவபிரானையே வழிபட்டுச் சைவசமயக் கோட்டிபாட்டினை எங்கும் பரப்புவனாகலின், அவன் கொண்ட வெற்றி தமிழ் மேன்மக்களால் மிகவும் பாராட்டப்பட்டுத் தமிழகம் எங்கும் வியந்து பேசப்படுவ தாயிற்று; அம் முருகவேளும் முருகக்கடவுளேயெனத் தமிழ்நாடெங்கணும் வைத்து வணங்கப்படுவானாயினன் இவ்வாறு, முருகன் சூர்மாவினைச் செற்ற வரலாறு தமிழர்க்கு ஓர் ஆக்கமாய் அவராற் பெரிதுங் கொண்டாடப் பட்டு வருதலைக் கி.மு.

முதல் நூற்றாண்டின் துவக்கத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/212&oldid=1588660" இலிருந்து மீள்விக்கப்பட்டது