உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

"அக்கும் புலியினதளும் உடையா ரவர்ஒருவர்

பக்கம் நிற்க நின்ற பண்பர்.

“ஏறும் ஏறியிலங்கும் ஒண்மழுப்பற்றும்

66

ஈசற்கு இசைந்து உடம்பிலோர்

கூறுதான் கொடுத்தான்.”

‘குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்

பங்கத்தாய்.”

245

(9.6.1)

(9,10,4)

(திருநெடுந்தாண்டகம், 9)

இவ்வாறு திருமங்கையாழ்வார் பாடியிருப்பவைகளை உற்றுநோக்கும்போது, வலப்பால் அப்பனாகிய சிவபிரானும் ப்பால் அம்மையாகிய திருமாலுங் கலந்த முழுமுதற்கடவு ளியல்பினை அவர் நன்கு உணர்ந்தவராகவே காணப்படு கின்றார். மேலும், தமிழ்ச்சுவை கெழுமித் துலங்கும் பெரிய திருமடல் என்னுஞ் சிறந்த பாவினைத் திருமங்கையாழ்வார் பாடிய தமது இறுதிக் காலத்திற் சிவபிரான்றன் முழு முதற்றன்மை தெளியப்பெற்று அவர்மீது அன்பினால் அகங்கரைந்தார் என்பதற்கு,

“மன்னு மலையரையன் பொற்பாவை வாணிலா மின்னு மணிமுறுவற் செவ்வாய் உமையென்னும் அன்ன நடைய அணங்கு நுடங்கிடைசேர் பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகலத் தன்னுடைய கூழைச் சடாபாரந் தான்தரித்துஆங்கு அன்ன அருந்தவத்தின் ஊடுபோய் ஆயிரந்தோள் மன்னு கரதலங்கள் மட்டிலத்து மாதிரங்கள் மின்னி எரிவீச மேலெடுத்த சூழ்கழற்கால் பொன்னுலகம் ஏழுங் கடந்துஉம்பர் மேற்சிலும்ப

மன்னு குலவரையும் மாருதமுந் தாரகையும் தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும்

கொன்னவிலும் மூவிலைவேற் கூத்தன் பொடியாடி

அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங்கு அணைந்திலளோ'

என்று அவர் சிவபிரான்றன் அருட்டிருக்கூத்தை வியந்து பாடியிருத்தலே சான்றாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/254&oldid=1588711" இலிருந்து மீள்விக்கப்பட்டது