உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

30

247

தொகுதி'யையும், இதன் இறுதிக்கண்ணதாகிய ‘பல்பொருட் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி'யை யும் ஆராய ஆராய அது கி.பி.பத்தாம் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதன்று என்பது புலனாகா நிற்கின்றது. பிற்பட்ட காலத்தனவாகிய பிருகற்பதி, காத்தியாயன, பராசரஸ் மிருதிகளையும்,3 அங்ஙனமே பிற்பட்டவனாகிய பிரமம், நாரதீயம், வாமநம்,வராகம், பாகவதம், வைணவம், பிரமவைவர்த்தம் முதலிய புராணங் களையுங் குறிப்பிட்டு, வடமொழித் தெய்வங்கள் சொற்கள் சொற்றொடர்கள் வழக்குகள் முதலியவற்றை மிகுதியாய்த் தழுவிக் கூறுதலின், 'திவாகரநிகண்டைக்’ கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகக் கொள்ளுதற்கு இடன் இல்லை. அதனால், அதன்கட் சொல்லப்பட்ட திருமாலின் பத்து அவதாரங்களைக் கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டன வாகக் கொள்ளுதற்கும் இடனில்லை யென்று உணர்க. பரசுராமரைத் திருமாலின் அவதாரமாகக் கட்டி விட்ட கதை கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதல் லாமையினாலே தான், அந்நூற்றாண்டிற்கு முற்பட்டிருந்த பொய்கை பேய் பூதம் என்னும் முதலாழ்வார் மூவரும்தம் பாடல்களில் எங்கும் பரசுராமரை எட்டுணையேனுங் குறிப்பிட்டிலர். தேவாரப் பாடல்களினுந் திருவாசகத்தினுங் கூடப் பரசுராமனைப் பற்றிய குறிப்பு சிறிதுங் காணப் படவில்லை. இவற்றுக்கு முற்பட்ட சங்கத்தமிழ் இலக்கியங் களிலுங் கண்ணன் பலராமனைக் குறிப்பிடும்பாட்டுக்களையே காண்கின்றனமன்றிப்,பரசுராமனைக் குறிப்பிடும் பாட்டு ஒன்றையாயினுங் காண்கின்றேம் இல்லை. இவ்வாற்றாற், பரசுராமனைத் திருமாலின் பிறப்பாகக் கொண்ட காலம் கி.பி.பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலும், பின்னர்க் கண்ணன் இராமனைப்போல அவனையும் ஒரு தெய்வமாக வத்து வணங்கத் துவங்கிய காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி முதலும் நிகழ்ந்தனவாதல் வேண்டும். ங்ஙனமே, கற்கியவதாரம் என்பதொன்றும் முதலாழ்வார் பாடல்களினாதல், அவர்கட்கும் முன்னிருந்தோர் பாட்டுகளி னாதல் தினைத் துணையுங் காணப்படாமையின், கற்கியவதாரம் என்ப தொன்று கொள்ளப்பட்டதும் அதுவும் வணங்கப்பட லாயினும் கி.பி.பத்தாம் நூற்றண்டு முதல் நிகழ்ந்த தாகுமென் றுணர்ந்துகொள்க. கொள்ளவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/256&oldid=1588713" இலிருந்து மீள்விக்கப்பட்டது