உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மறைமலையம் 23

மொத்தம் பன்னிரண்டேயாம். இனி, 'இன்னிலை'யில் வட சொற்களெனக் காணப்படுவனவும், பித்தர், நரகு, சீலன், முனிவன், புவி, காமம், கணம், மாரன், அன்னம், குணம், வீரர், குரவர், எனப் பன்னிரண்டேயாம். இவற்றுள், முனிவன், காமம், அன்னம், குரவர் என்னுஞ் சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்கட் சென்று வழங்கினவாயிருக்கலாமேனும, அவற்றையும் வடசொற்களெனவே இஞ்ஞான்றுள்ளார் கூறுதலின் அந் நான்கையும் உடன் சேர்த்து எண்ணினாம். கவே, இன்னிலை நாற்பத்தைந்து செய்யுட்களினும் விரவின வடசொற்களும் மொத்தம் பன்னிரண்டேயாம். இவ்வாற்றாற், களவழி, இன்னிலை என்னும் நூல்கள் ஆக்கப்பட்ட காலத்தில் தமிழ்மொழிக் கண் வடசொற்கள் மிகச் சிறிதே கலந்தமையும், அங்ஙனங் கலந்த அச் சில வடசொற்கடாமுந் தமிழ்ச்சொற் களோடு ஒத்த மெல்லோசை யுடைமையும் நன்கு புலனாம்.

இனிப், பொய்கையாழ்வார் இயற்றிய ‘முதற்றிரு வருந்தாதி’ நூறு செய்யுட்களிலும் விரவிய வடசொற்களோ மொத்தம் அறுபத்துமூன்று; அவை: அங்கம், அசுரர், அந்தரம், அமரர், அயன், அரி, ஆதி, இரணியன், உத்தமன், கங்கை, கஞ்சன், கணம், கதி, கருமம், குணம், கேசவன், சரண்,சார்ங்கம், சிங்காசனம், சிந்தியாது சிந்தை, சிரம், சுராசுரர், சோதி, ஞானம் தநதிரம், தரணி தருமன், தனம், தாமம், திசை, தூபம், நமன், நமோநாரணா, நரகு, நாமம், நாரணன், நிசாசரர், நியமம், நீதி, நேமி, படம், பலி, பாதம், பாரசி, பாவம், புண்ணியம், புந்தி, புவி, பூதம், பூமி, போகம், மதம், மந்திரம், மரகதம், மாருதம், மாவலி, மூர்த்தி, வந்திப்பார், வரம், வராகம், விடம் என்பனவாகும். இவற்றுள் பெரும்பாலான கடைச்சங்க காலத்து நல்லிசைப் புலவர் இயற்றிய செய்யுட்களிற் காணப்படாமையோடு, திருமான் மேற் பாடிய பரிபாடற் செய்யுட்களில் அவை கலத்தற்கு உரியனவாயிருந்தும், அவற்றின் கண்ணும் அவை கலந்தில. கடைச்சங்ககாலத்து இறுதியில், அஃதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றில் ஆக்கப்பட்ட 'சிலப்பதி காரம்’, 'மணிமேகலை', என்பவற்றுள் முன்னையினும் சிறிது கூட வடசொற்கள் கலந்தனவெனும் அவற்றின்கண்ணும், பொய்கையாழ்வாரது அந்தாதியிற் காணப்படும் வடசொற் களிற் பல காணப்படுகின்றில. ஆகவே,கடைச்சங்க காலத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/269&oldid=1588726" இலிருந்து மீள்விக்கப்பட்டது