உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம் - 23

'மணிமேகலை'யை ஆராய்ந்து நோக்கினால், அப்பொழுது தமிழ்நாட்டிற் பரவியிருந்தது. மகாயான பௌத்தமே' யாதலும் நன்குபுலனாம். இம் மகாயானம் சைவசமயக் காள்கை களோடும், வழிபாட் முறைகளோடும்

பெரிதொத்து நின்றமையால், அதற்கும் சைவசமயத்திற்கும் ஏதொரு பகைமையும் நேர்ந்திலது. இங்கிருந்த மக்கள் சிவபிரான் கோயில்கட்குஞ் சென்றனர். பௌத்த சைத்தியங் கட்குஞ் சென்றனர். சிவபிரான் றிருக்கோயில்களைப் போலவே ஆங்காங்குப் புத்தராலயங்களும் அமைக்கப்பட்டிருந்தன. புத்தராலயங்களிற் சிவபிரான் திருவுருவங்களும் அம்மையின் றிருவுவருங்களும் வைத்து ஒருங்கு வணங்கப்பட்டது.

6

புத்த

வடக்கே காசிக்கு அருகிலுள்ள சாரநாதத்தில் அழிந்து பட்ட பளத்தப் பள்ளியிலிருந்து எடுக்கப்பட்ட ருருவங்களோடுகூட, றிருவுருவம் நந்தி அம்மை முதலியனவும் வைக்கப்பட்டிருத்தலை இன்றும் நேரே சென்று காணலாம். கி.பி.55 முதல் 78 வரையில் வடமேற்கிந்தியாவை அரசாண்ட இரண்டாங் ‘கத்பிசிஸ்' என்னும் மன்னன் சிவபிரானிடத்து மிக்க அன்புடையனாத லால் தான் வழங்குவித்த பொற்காசுகளிற் சிவபிரான் றிருவுருவமும் நந்தியும் பொறித்து விடுத்தனன். அவற்குப்பின் அரசுக்குவந்த கானிஷ்க' மன்னன் பௌத்த சமயத்தைத் தழுவினவனாயிருந்தும் அப் பொற்காசுகளைச் சிதையாமல் அவற்றை அவ்வாறே தானும் வழங்கு வித்தனன்; சைவசமயத்தைத் தழுவிய மகாயான பௌத்தமே அப்பெரிய பௌத்த வேந்தன் காலத்திற் பரவியிருந்தமை இதனால் நன்குணரப்படும்.

உடனெடுக்கப்பட்ட சிவபிரான்

கூடச்

7

கி.பி. 606 ஆம் ஆண்டில் அரசுக்கு வந்து வட நாட்டை யாண்ட ‘ஹர்ஷ' வேந்தனுங்கூட மகாயான பௌத்தத்தைத் தழுவிச் சிவபிரானிடத்தும் அன்புடையனாய் விளங்கினான்.8 இக் 'ஹர்ஷ' வேந்தன் குடும்பத்தினரும் இவற்கு முன்னோருங் சிவபிரானிடத்தும் புத்தரிடத்தும் அன்பராய்த் திகழ்ந்தனர். இங்ஙனமே, தென்னாட்டிலிருந்த அக்காலத் தரசர்களும் புலவரும் பிறரும் சைவசமயத்தையும் அதனோ டொத்த மகாயான பௌத்தத்தையுந் தழுவியிருந்தன ரென்பதற்குச் சேரன் செங்குட்டுவன் என்னும் மாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/27&oldid=1588253" இலிருந்து மீள்விக்கப்பட்டது