உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

  • மறைமலையம் - 23

‘இன்னிலை' என்னும் நூல்கள் அவ் விலக்கணம் பற்றி வந்தனவோவேனிற் காட்டுதும்.

66

66

66

“களவழியில் "நாண்ஞாயிறுற்ற செருவிற்கு” என்பதும், ஞாட்பினுள் எஞ்சிய” என்பதும், “யானைமேல் யானை என்பதும், கழுமிய ஞாட்பினுள்” என்பதும், “ஓவாக்கணை பாய என்பதும், "பரும இனமா” என்பதும், ஆர்ப்பெழுந்த என்பதும், ‘இணைவேல்” என்பதும், “ஒற்றிவயவர்” என்பதும், 'திண்டோண் மறவர்”என்பதும், “எவ்வாயும் ஓடி” என்பதும், "பொய்கையுடைந்து” என்பதும், “இணரிய ஞாட்பினுள்” என்பதும், “செவ்வரைச்சென்னி” என்பதும், “ஓஒஉவமன்’ என்பதும், “வேனிறத்திங்க” என்பதும் ஐந்தடிகளான் வந்த அளவியல் வெண்பாவாகும்; "நானாற்றிசையும்" என்பதும், ருநிலஞ்சேர்ந்த என்பதும் ஆறடிகளான் வந்த அளவியல் வெண்பாவாகும்; இங்ஙனம் ஐந்தடியான் வந்தன பதினாறும், ஆறடியான் வந்தன இரண்டும்போக எஞ்சிய இருபத்துமூன்றும் நான்கடியான் வந்த அளவியல் வெண்பாக்க ளாகும்; இந் நான்கடியான் வந்தவற்றுள்ளும் இரண்டாம் அடியில் தனிச் சொல்லின்றி, நான்கடியும் ஓர்எதுகைப்பட நின்றவை 3, 9, 30, 39 என்னும் நான்குமாகும்; ஏனைப் பத்தொன்பது வண்பாக்களும் இரண்டாம் அடியிற் றனிச்சொற்பெற்று இருவேறு எதுகைகளானும், மூவேறு எதுகைகளானும் வந்தனவாகும்.

66

இனி, 'இன்னிலை’யுள்ளுங்

"காமம்வீழ் இன்பக் கடலாமே” என்பதும், “ஒன்றுண்டே” என்பதும் ஐந்தடியான் வந்த அளவியல் வெண்பாக்க ளாகும்; “கடன் முகந்து” என்பதும், “தோற்றோரே வெல்வர்” என்பதும், "பேராப் பெரு நிலன்” என்பதும் மூன்றடியான் வந்த குறுவெண்பாக்களாகும். இவ்வாறு ஐந்தடியான் வந்தன இரண்டும், மூன்றடியான் வந்தன மூன்றும்போக, எஞ்சிய நாற்பதும் நான்கடியான் வந்த அளவியல் வெண்பாக்களாகும் இந்நான் கடியான் வந்த வற்றுள்ளும், இரண்டாம் அடியில் தனிச்சொல்லின்றி நான்கடியும் ஓர் எதுகைப்பட நின்றவை 2, 12, 16, 18, 23, 35, 36, 39, 44 என்னும் ஒன்பதும் ஆகும்; இரண்டாம் அடி அடியில் தனிச்சொல் எதுகையும் பெற்று நான்கடியும் ஓரெதுகைப்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/271&oldid=1588728" இலிருந்து மீள்விக்கப்பட்டது