உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் - 23 ×

10

ஒருவரைத் துணையாகப் பற்றிக் கொண்டு இலங்கைக்குச் சன்று ‘தூபராமத்’திற்கூடிய ஒரு பேரவையில் அப்போதிருந்த இலங்கைப் பௌத்த குருக்களின் தலைவரோடு வழக்கிட்டு அவரை வென்றன ரென்றும், அதுமுதல் அவ்வரசன், வழக்கில் வென்ற சங்கமித்தன் என்னுங் குரவர்பால் அன்புமீதூரப் பெற்றனரென்றும் 'மகாவம்ஸமே' கூறாநிற்கின்றது. மாணிக்கவாசகர்க்கும் இலங்கைப் பௌத்தர்க்கும் நடந்த வழக்கு ‘மகாவம்ஸத்' தின்கண் வெளிப்படையாகக் கூறப்படா விடினும், இவ் வரலாறுகளை உற்றுநோக்குங்கால் அத்தகைய தொன்று ‘ஓகாரிகதிஸ்ஸன் என்னும் இலங்கையரசன் காலத்திற்கு முன்னர் நடந்தமை உண்மையென்பது புலப்படும். அவ்வழக்கில் தோல்வியுற்றுச் சைவசமயந் பௌத்தர்களே, அவ்வரசன் காலத்தில் 'வேதுல்யமதத்தவ’ ராகக் கொள்ளப் படுவாராயினர். 'கோடாபயன்’ அல்லது 'மேக வண்ணாபயன்' என்னும் இலங்கை மன்னன் காலத்திலும், இவ்வேதுல்ய மதத்தின் குருவாகச் சோழ நாட்டினின்றும் போந்த ஒருவரே தூபராமத்திற்கூடிய பேரவையிற் பௌத்த குருமார்களின் தலைவரை வென்றவராகச் சொல்லப்படுதலால், இங்ஙனம் வெற்றிகொண்ட 'சங்கமித்தன்’ என்னும் வேதுல்யமத குருவே, மாணிக்கவாசகப் பெருமானோடு வழக்கிட்டுத் தோற்றுச் சைவசமயந் தழீஇப் பின்னர் இலங்கைக்குப் போந்து சைவசமயக் கோட்பாடு உடையதாகிய நமது 'வேதுல்ய மதத்'தை அங்கு நாட்டினாராதல் வேண்டும்.

தழுவிய

சங்கமித்தன் என்னும் இவ் வேதுல்யமத குருவைப் பற்றி 'மகாவம்ஸம்' கூறுவனவெல்லாம் ஆராயுங்கால், அவர் சைவசமயத்தினராதலை நன்கு வலியுறுத்தும், மேகவண்ணா பயனுக்கு முப்பத்தேழு ஆண்டு முற்பட்ட ‘ஓகாரிகதிஸ்ஸன்’ காலத்திலேயே இவ் வேதுல்யமதம் இலங்கையிற் புகுந்தமை மேலே காட்டப்பட்டமையால், கி.பி. 250 ஆம் ஆண்டிற்கும் 260ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், அஃதாவது சிவபிரான் அடியவனான வரகுணபாண்டியன்றன் மகன் அரசுபுரிந்த காலத்திலேதான் மாணிக்கவாசகப் பெருமானுக்கும் இலங்கைப் பௌத்தர்கட்கும் வழக்கு நடந்ததாகல் வேண்டு மென்பது பெறப்படும். இனி, 'மகாவம்ஸம்' உரைக்கும் வரலாறுகளை நன்காய்ந்து பாராதார் தூபராமப் பேரவைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/29&oldid=1588262" இலிருந்து மீள்விக்கப்பட்டது