உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

  • மறைமலையம் - 23

என்னுஞ் சொற்றொடர்கொண்டு வழங்குதல் ஏற்புடைத்து. அங்ஙனம் முன்னர் ஒருகாற் சிவமாகாமலிருந்து பின்னரொரு காற் சிவமாவன யாவையென்றால், அவைதாம் நம் கண்ணெதிரே காணப்படும் பலதிறப்பட்ட உயிர்களாதல் வேண்டுமென்க. இவ் வுயிர்களெல்லாம் மலம் மாயை வினையென்னும் மும்மலங்களாற் பிணிக்கப்பட்டிருத்தலையும் நம்மெதிரே காண்கின்றோம் எல்லா உயிர்களும் அறியாமை யுடையனவாய் இருக்கின்றன; இவ்வாறிருப்பது மலத்தின் சயல் எல்லா உயிர்களும் உயிர்களும் மாயையால் ஆக்கப்பட்ட உடம்புகளும் அவ்வுடம்புகளில் மெய் வாய் கண் மூக்குச் சவியென்னும் உணர்வு நிகழ்ச்சிக்கு வாயிலான அறிவுப் பொறிகளும், உணர்ந்தபின் தொழில்புரியும் நா கை கால் குறி குதம் முதலான தொழிற்பொறிகளும், உடம்பினுள் நின்று இவற்றை இயக்கும் மனம் நினைவு அறிவு நான் என்னும் அகக்கருவிகளும் உடையனவாய் அவற்றின் உதவியால் அறியாமை சிறிது சிறிதா நீங்கி அறிவு விளங்கப்பெற்று வருகின்றன; இவ்வாறு அறிவு விளங்குதற்கு உதவிசெய்வது மாயையின் செயல்.

ங்ஙனம் மலம் மயை யென்னும் இரண்டின் அகமாய் நின்று உயிர்கள் வினைசெய்யுங்கால் நல்வினையுந் தீவினையும் என இருவகைவினைகள் தோன்றும்; அடுத்தடுத்துச் செய்யும் இவ்வினைகளால் உண்டாம் பழக்கத்தை உயிர்களின் அறிவிற் பதித்தல் வினையின்செயல். இனி, மலத்தால் அறியாமையும், மாயை வினைகளால் அவ்வறியாமை நீங்கி அறிவுவிளங்குதலும் உயிர்கண்மாட்டு இடையறாது நிகழ்தலை நாம் நேரே காண்கின்றனமாயின். மலம் ஒன்றுமே செம்பிற் களிம்புபோல உயிர்களோடு இயற்கையாய்ப் பொருந்திநின்று அதன் விழைவு அறிவு செயல்களைத் தொன்றுதொட்டு மறைத்துநிற்பதா மென்பதூஉம். ஏனை மாயையும் வினையும் அம்மல நீக்கத்திற்கும் அறிவு விளக்கத்திற்கும் உதவியாய் இடையொரு காலத்து உயிர்கட்கு வந்து வாய்த்தனவாமென்பதூஉம், மலநீக்கத்திற்கு உதவிசெய்யும் இவ்விரண்டும் அம்மலத்தோடு உடன்நின்று அதன் சார்பால் தாமும் ஒரோவொருகால் உயிர்கட்கு மயக்கத்தை வருவித்தலின் அதுபற்றி இவையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/39&oldid=1588292" இலிருந்து மீள்விக்கப்பட்டது