உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

12. சமணர்கள் தமிழ் ஆகமங்களை

அழித்தமை

இனி, ஆகமங்களிற் சொல்லப்படும் ஆணவம் மாயை வினை யென்னும் மும்மலங்களும், 'இருவினையொப்பும்' தேவராங்களிற் காணப்படாமையால், ஆகமநூல்கள் பரவுதற்கு முன் தேவாரங்கள் பாடப்பட்டனவாமென்றும், 'மும்மலம்’, இருவினையொப்பு' என்னும் இவற்றைப் பற்றிய குறிப்புகள் திருவாசகத்தின்கட் காணப்படுதலின் ஆகமம் சிறிது பரவத் தொடங்கிய காலத்தேதான் திருவாசகம் பாடப்பட்டதாதல் வேண்டுமென்றும், ஆகமம் பரவியபின் அதிற் சொல்லப்பட்ட ‘தீக்ஷை’யை ஆசிரியன்பாற் பெறுதல் அடியார்க்கு இன்றியமை யாததாயிற் றென்றும், அவ்வாறு 'தீக்ஷை' பெற்றவர் திருவாதவூ ரடிகள் ஒருவரேயன்றி ஏனை நாயன்மார் அது பெற்றவரல்ல ரென்றும், அதனால் அடிகள் ஏனை மூவர்க்கும் பிற்பட்ட வராகலா மென்றும் 'தமிழ்வரலாறுடையார்'தமது கொள்கையினைக் கூறினர்; இங்ஙனம் கூறுகின்றழித் தாம் உரைப்பவற்றிற் றமக்கே துணிவு பிறவாதவாறுபோல் நெகிழ்ந்துரையாடியும் போனார். ஆயினும், இவர் காட்டிய இவ்வேதுக்கள் பொருந்தாமை காட்டுதும்:

சைவ சமயாசிரியராகிய சுந்தரமூர்த்தி நாயனார் தாமருளிச் செய்த 'திருத்தொண்டத்தொகையில்’ திருமூல நாயனாரைக் குறிப்பிட்டிருத்தல் கொண்டும், திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருவாவடுதுறைக்கு எழுந்தருளிய காலத்து ண்டுத் திருக்கோயிலிற் புதைத்து வைக்கப்பட்டிருந்த திருமந்திர' நூலினை வெளிப்படுத்தி அந் நூலின் அருமையும் அதனை ஆக்கிய திருமூலநாயனாரின் பெருமையும் அங்குள்ளார்க்கு எடுத்துரைத்து அந் நூலினை வழங்கவைத்தா ரெனத் தொன்று தொட்டு வரா நின்ற வரலாறு கொண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/67&oldid=1588328" இலிருந்து மீள்விக்கப்பட்டது