உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் -23

“மும்முலங்கள் பாயுங், கழுக்கடை,”

(திருத்தசாங்கம், 4)

எனவும்,

“மயக்கமாயதோர் மும்மலப் பழவல்வினை.”

(திருக்கழுக்குன்றப் பதிகம்,7)

எனவும்,

“உள்ளமல மூன்றும் மாய

(பண்டாய நான்மறை, 2)

எனவும்,

66

(அச்சோப்பதிகம், 9)

மும்மை மலம் அறுவித்து”

எனவும் மும்மலங்களை ஓதியதோடு,

“மலங்கள் ஐந்தாற் சுழல்வன்

தயிரிற் பொருமத் துறவே”

(நீத்தல் விண்ணப்பம். 29)

என மலங்கள் ஐந்தாதலும் ஒருவயின் அருளிச்செய்தார். எனவே, ஆணவம் மாயை வினை என்னும் மும்மலங்களில் இடைநின்ற மாயையை இரண்டாகக்கொண்டு ஒன்றைத் ‘தூயமாயை’, மற்றொன்றைத் ‘தூவாமாயை' என வழங்குதலும், உயிர்கள் இம்மைப் பிறவியிற் இன்பதுன்பங்களை நுகருங்கால், உம்மைப் பிறவியிற் செய்தனவும் அம்மைப் பிறவியிற் செயக்கடவனவுமாய வினைகளையும் வினைப் பயன்களையும் அவை தெரிந்து இடையறாத் துன்பத்தின் மூழ்காவாறு, ஆணவமலம் நீங்கும்பதம் வருந்துணையும் அதனோடு உடனாய்நின்று அவ்வுயிர்களின் அறிவுக்கு அவை தோன்றாமல் மறைத்து உதவிவரும் இறை வனருளை அங்ஙனம் மறைக்கு மியல்புபற்றி 'மலம்' என ஒரோவழி வழங்குதலும் அடிகட்கு உடம்பாடாதல் பெற்றாம். பெறவே, மாயையைச் ‘சுத்தமாயை’, ‘அசுத்தமாயை' எனவும், ஆணவத்தோடுடனாய், நின்றுவினை வினைப் பயன்களைத் தோன்றாமல் மறைக்கும் அருளைத் 'திரோதானம்' எனவும் காண்டு, இவைதம்மை ஆணவம்', ‘கன்மம்' என்னும்

6

இரண்டொடுகூட்டி 'மலம்ஐந்து' என்று கொள்ளும்

சைவசித்தாந்தக் கோட்பாடு ஒன்றே திருவாதவூரடிகள் கோட்பாடாகுமல்லாமல், அவ்வாறு ஐந்து மலங்களின் உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/69&oldid=1588338" இலிருந்து மீள்விக்கப்பட்டது