உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மறைமலையம் - 23

பொருந்தினும் பொருந்தும். முதலில் ஒன்பது வகையாயும் பின்னர் இருபத்தெட்டாயும் விரிந்து வழங்கிய சிவாகமங்களைச் சிறுபான்மை வழக்கமுடையன வென்றல் பொருந்துமோ கூறுமின்! திருமந்திர நூலைச் செவ்வனே கற்றறியாதாரே ஆகம வழக்கத்தை நன்குணராமற் றமக்குத் தோன்றிய வாறெல்லாம் பிழைபடக்கூறு நீரராவர். எனவே அடிகள்,

“மன்னு மாமலை மகேந்திரம் அதனிற்

சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும்” (கீர்த்தித்திருவகவல், 9, 10)

என்றும்,

"மற்றவைதம்மை மகேந்திரத் திருந்து

உற்றஐம் முகங்க ளாற்பமணித் தருளியும்."

(கீர்த்தித்திருவகவல், 19, 20)

என்றும் பலவிடங்களில் அருளிச்செய்திருத்தல் கொண்டு ஆகம வழக்கம் மிகுந்திருந்த காலத்தில் அவர் இருந்தாரென்பது பெறப்படுமேயன்றி, அதனால் அவர் தேவார காலத்திற்குப் பிற்பட்டிருந்தாரென்பது எட்டுணையும் பெறப்படாதென்க.

அற்றேல், திருவாசகத்தில் ஆகமங்கள் பலவிடத்துங் குறிப்பிடப்படுதல் லல்லாமல் தேவாரத்தில் அருகி யாண்டோ சில விடங்களில் அவை குறிப்பிடப்படுதல் என்னையெனின்; மாணிக்கவாசகப் பெருமானுக்கு முற்காலத்தே கடவுளும் உயிரும் இல்லாத வெறும்பாழெனக் கூறும் கூறும் 'ஈனயான பௌத்தம்' சான்றோர்க்கும் உலகத்தார்க்கும் இசையாமையின் ஒடுங்கிப் போக, அறிஞர் பலர்க்கும ஒப்ப முடியுமாறு சைவசமயக் கோட்பாடுகளைத் தழுவி வகுத்த ‘மகாயான பௌத்தமே' யாண்டும் பரவி வழங்கலாயிற்று; அக் காலத்தே தான் 'பௌத்தாகமங்களைப் போன்ற சைவாமகங்கள் எழுதப்பட்டுப் பௌத்த சமயக் கோட்பாடுகளை மறுத்துச் சைவசமய உண்மைகளை அளவை நூன்முறையால் தொடர்பு படுத்து விளக்குவவாயின; அக்காலத்திற்குமுற் சைவசமய உண்மைகளைத் தடைவிடை களான் விளக்கி அளவை நூன்முறை வழுவாது விரித்து ஆராய்ந்து காட்டும் நூல்கள் தமிழிலாயினும் வடமொழியிலாயினும் சிறிதும் இருந்தில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/71&oldid=1588342" இலிருந்து மீள்விக்கப்பட்டது