உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

என்றும்,

மறைமலையம் - 23

“செயிரிற் றலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரிற் றலைப்பிரிந்த ஊன்

என்றும் வற்புறுத்தருளினார் திருமூலரும்,

“பொல்லாப் புலாலை நுகரும் புலையரை

(242)

என்று புலாலுண்பார் அனைவரையும் ஒருங்கே அருவருத்துப் பெரிதும் இகழ்ந்துரைத்தமை காண்க. இருக்கு வேதத்தைச் சேர்ந்த ஆசுவலாயன சூத்திரத்'திலும், சாங்காயன சூத்திரத்'திலும், வாஜபேயம், ராஜசூயம், அசுவமேதம், புருஷமேதம், சர்வமேதம், என ஐவகை கேள்விகள் வேட்குமாறு சொல்லப்பட்டிருக்கின்றது; சாங்காயனர் இவ் வேள்வி வேட்கு முறைகளை மிகநுணுக்கமாக விரித்துரைக்கின்றார். கிருஷ்ண யஜுர்வேத தைத்திரீய சம்ஹிதையின் நாலாங்காண்டம் ஆறாம் பிரபாடகத்திற் குதிரையைக் கொன்று வேட்கும் அசுவமேத இயல் வகுத்துரைக்கப்பட்டிருக்கின்றது; தைத்திரீய பிராமணத் திலோ (3, 4) சௌத்திராமணி வேள்வியும், ஆண்மகனைக் கான்று வேட்கும் வேள்வியுங் கூறப்பட்டிருக்கின்றன. சதபதபிராமணம் (7, 5, 2) ஆண்மகன், குதிரை, எருது, செம்மறி, வெள்ளாடு முதலான ஐவகை யுயிர்களின் தலைகளை வெட்டிச், சங்கற் பலிபீடத்தின் அடியிற் அடியிற் புதைக்குஞ் சட்டியில் இடுகவென்று கட்டளையிடுகின்றது; ஒருகால் நூற்றுத் தொண்ணூற்றைந்து ஆண்மக்களை வெட்டி வேள்விவேட்ட குறிப்பும் அந்தச் சதபத பிராமணத்திலேயே காணப்படுகின்றது (13, 6, 2) குதிரையைக் கொன்று வேட்கும்வேள்வி இருக்குவேத முதன்மண்டிலத்தின் நூற்றறுபத்திரண்டாம் பதிகத்திற் றெளிவாகச் சொல்லப் பட்டிருத்தலால், ஆரியர் உயிர்க்கொலை புரிந்து அவற்றின் ஊனைத் தின்றுவந்தமை மறுக்கப்பட உண்மையேயாம். இன்னும் இதனை விரிப்பிற் பெருகும், இவ் வாரியரது சேர்க்கையாற் றமிழ் அரசர்களும் செல்வர்களும் இத்தகைய உயிர்க்கொலை வேள்விகளை மிகுதியாய்ச் செய்யத்தலைப் படவே, உயிர்க்கொலை எங்கும் பெருகக் கண்டு வருந்தி அதனைத் தடைசெய்தற் பொருட்டே, 'திருக்குறள்’ ‘நாலடியார்' முதலான அறநூல்கள் மிக்கெழுந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/99&oldid=1588385" இலிருந்து மீள்விக்கப்பட்டது