உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

28.

மாணிக்கவாசகர் காலத் திட்டமுடிபு

னிப், பத்தாம் நூற்றாண்டிற்குமுன் உரை யியற்றிய உரையாசிரிய ரெவருந் தமதுரையுள் திருவாசகம்’, 'திருக்கோவையார்' என்னும் நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் காட்டிற்றிலரெனக் கூறுவான் புகுந்து முதற்கண் றையனாரகப் பொருளுரை'யில் திருக்கோவையார் துறைச் செய்யுட்களை அதன் உரைகாரர் எடுத்துக் காட்டாமை யினையும், இரண்டாவதாகத் தொல்காப்பிய அகத்திணை யியல் களவியல் கற்பியல்கட்குப் போந்த

உரையில் இளம்பூரணர் அதன் செய்யுட்களை அங்ஙனமே எடுத்துக் காட்டாமையினையுந் 'தமிழ் வரலாறுடையார்' குறித்துப் பேசி, அவ்வாற்றால் திருவாசகம் திருக்கோவையா ரென்பன கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேதான் இயற்றப்பட் வாதல் வேண்டுமெனக் கூறினார்.

‘அவநி சூளாமணிமாறன்' காலத்தில் தமிழ்மொழிப் பயிற்சி மிக்கோங்கியிருந்தமையின், அப்போது பெரிது பயிலப்பட்டு வந்த இறையனாரகப் பொருளுரை'யில் அவ்வேந்தன் காலத்திருந்த புலவர் ஒருவர் அவனைப் பாட்டுடைத் தலைவனாக நிறுத்திப் பாடிய கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களெல்லாவற்றையும் அவ் வுரையின் கட் புகுத்திவிட்ட வரலாற்றினை மேலே 778 ஆம் பக்கம் முதல் 783 ஆம் பக்கம் வரையில் வைத்து ஆராய்ந்து விளக்கிக் காட்டியிருக்கின்றேம். மற்று, அவ்வுரையினை யியற்றிய ஆசிரியர் நக்கீரனார் கி.பி.முதல் நூற்றாண்டில் மாணிக்க வாசகப் பெருமானுக்கு முன்னே யிருந்தவராகலின் அவர் 'திருச்சிற்றம்பலக்கோவையா’ரிலிருந்து

காட்டுதல் யாங்ஙனங் கூடுமென மறுக்க.

மேற்கோள்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/266&oldid=1590897" இலிருந்து மீள்விக்கப்பட்டது