உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குனிதலை நிமிர்த்தியவர்!

மறைமலை யடிகளே

நிறைதமிழ் வளர்த்தவர்!

மனங்கொள நினைத்திடுக! - அவரது

மாண்பினைப் புகழ்ந்திடுக!

குறைவுறு நூல்பல

நிறைவுறத் தந்தவர்!

குனிதலை நிமிர்த்தியவர்! - செந்தமிழ்க்

குடியினை உயர்த்தியவர்!

அறிவியல் எழுதினார்;

நெறிமுறை கூறினார்;

ஆய்வுசெய் திறமுரைத்தார்- ஆரியர்

அடங்கிட மறமுரைத்தார்!

செறிவுறுங் கருத்தினால்

முறிவுற மடமையைச்

சினத்தொடு தாக்கியவர் - குலவெறிச்

சிறுமையைப் போக்கியவர்.

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

உழை

உயர் உதவு

தமிழ்மண்

2, சிங்காரவேலர் தெரு,

தியாகராயர் நகர், சென்னை - 600 017

தொலைபேசி : 044 24339030

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/338&oldid=1591012" இலிருந்து மீள்விக்கப்பட்டது