உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் - 5

vii

புகழ் மாலை

வாழ்த்தாத நாளில்லை வையகம்

மறைமலையடிகள் மறையாத் திருப் பெயர் –

வாழ்த்.

ஆழ்ந்து கடலில் முத்தெடுப் பார் போல்

அகன்ற உலக இலக்கியம் அனைத்திலும்

வீழ்ந்து பொருளுண்மை விளக்கும் ஆற்றலால்

வெல்ல முடியாத நல்லா சிரியனை

வாழ்த்.

தென்னாடு சார்ந்த குமரிப் பெருநிலம்

திரைகடல் மறந்த உண்மைச் செய்திக்குப்

பொன்னேடு காட்டும் புலவர்க்குக் புலவனைப்

பொழுதெல்லாம் தமிழுக் குழைத்த தலைவனை - வாழ்த.

மறையெனப்படுவது தமிழ் நான் மறைநூல் மற்றை மறைநூல் பின்வந்த குறைநூல் முறையாய் இவைகட்குச் சான்றுகள் காட்டி முழக்கஞ் செய்த முத்தமிழ் அறிஞனை -

வாழத்.

பாவேந்தர் பாரதிதாசனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/8&oldid=1590396" இலிருந்து மீள்விக்கப்பட்டது