உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருவாசக விரிவுரை

143

'பிரமற்கு' என்பதில் நான்காம் வேற்றுமை யுருபு. “அதனாற் செயற்படற் கொத்த கிளவியும்”* (தொல்காப்பியம் வேற்றுமை மயங்கியல் 27) என்பதனால் மூன்றும் வேற்றுமைப் பொருளில் மயங்கிற்று.

அறியாதவன்' என்பது அறியப்படாதவன் என்னும் பொருட்டு; “செயப்படு பொருளைச் செய்ததுபோலத், தொழிற் படக் கிளத்தலும் வழக்கியன் மரபே”* (தொல்காப்பியம் வினையியல் 49) என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும்.

மீண்டு வாரா வழியருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி யாகவும்

மீண்டு வாராவழி அருள்புரிபவன் - திரும்பி இப்பிறவிக்கு வராத வீட்டுநெறியை அருள் செய்பவன், பாண்டி நாடே பாண்டிய தேயத்தினையே, பழம்பதியாகவும் பழைய இடமாகத் தான் கொண்டருளியும் என்றவாறு.

-

இறைவன் திருவருளைத் தலைக்கூடி அதனோடொன் றாயினார் மீண்டு இப்பிறப்பின்கண் வராமை ஒருதலையாகலின் அப்பேற்றிற்குச் செலுத்தும் நெறியினை ‘மீண்டு வாராவழி' என்றருளிச் செய்தார்; தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும்,

“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி”

என்றிங்ஙனமே அருளிச் செய்தமை காண்க.

(திருக்குறள் 356)

பாண்டின் நாடு என்பது 'பாண்டிநாடு' என மருவிற்று. இம்மரூஉமுடிபுகள் “வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும்"* (தொல்காப்பியம் எழுத்து 483) என்பதனான் அமைக்கப்படும். இறைவன் ஒரு பாண்டிய மன்னனாகப்போந்து மதுரைமாநகரிற் செங்கோல் ஓச்சினமை பற்றி அந்நாடு அவற்கு ஒரு பழம்பதியாகக் கூறப்பட்டது. இது குறித்தே கல்லாடத்தும்* (கல்லாடம் 4)

66

கடுக்கைமலர் மாற்றி வேப்பலர்சூடி

ஐவாய்க் காப்புவிட் டணிபூண் அணிந்து

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/176&oldid=1589406" இலிருந்து மீள்விக்கப்பட்டது