உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் - 25

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

திருவாசக விரிவுரைக்கு எண்பது நூல்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி உள்ளார். கற்பார் உள்ளம் உருக்கி, அவரைப் பேரின்பப் பெருங்கடலில் ஆழ்த்தும் திருவாசகத்தின் இறைநிலையைப் பாராட்டும் நூல். ஆரியரான் மறையில் காணப் படாத அதன் பேரழகை உணர்ந்து உணர்த்தும் நூல். திருவாசகத்தின் ஓங்கார உண்மை, அறிவு விளக்கம், இறைவனின் ஐஞ்செயல், ஐந்திறங்கள், வழக்கு வகைகள், திருநீற்று உண்மை ஆகியவற்றை எடுத் தியம்பும் அடிகளாரது கல்வித்திறனுக்கும், அறி வாற்றலுக்கும், சமயப்பற்றுக்கும் கிடைத்த அடையாள மாகவும், மாபெரும் சமயக் கொடையுமாகும்.

- இரா. இளங்குமரன் இந்திய இலக்கியச் சிற்பிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/35&oldid=1589166" இலிருந்து மீள்விக்கப்பட்டது