உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயம் - 6

vii

புகழ் மாலை

சிலப்பதிகாரத்தில் 'சித்திரமடத்துள்' என்னும் கானல் வரியில், 'யாழ்கையில் தொழுது வாங்கி' எனவரும் பகுதியைக் கேட்ட அடிகளார், யாழ்கையில் “தொழுது வாங்கியவர் யார்? கொடுத்தவர் யார்?” என வினவினார்.

66

“வாங்கியவர் மாதவி, கொடுத்தவள் வயந்தமாலை' என்றேன். வயந்தமாலை ஏவற்பணிப்பெண்ணாகிய சேடியே அன்றோ! அவளை மாதவி தொழுதல் வேண்டும்? என வினவினார்.

உடனே

L

எற்றுக்குத்

வினாவை எதிர்பாராத யான் சிறிது தயங்கினேன். அடிகளார், "மாதவி தொழுதது வயந்தமாலையை அன்று; யாழ்க் கருவியையே மாதவி தொழுதாள். இசைத் தெய்வம் அதன் கண் தங்கி உறைவதாகக் கலையுணர்வு மிக்க மாதவி கருதினாள்” என்றார் அடிகள்.

- ந.ரா. முருகவேள்.

"மறைமலையடிகளும் கா.சு. பிள்ளையும் என்

வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள்”.

– பெரியார் ஈ.வே. இராமசாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/8&oldid=1589134" இலிருந்து மீள்விக்கப்பட்டது