உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் 26

L

சாகுந்தல நாடகம்

முகவுரை

அருமை

இற்றைக்கு 1480-ஆண்டுகளுக்கு முன் வடநாட்டில் உச்சயினி மாநகரின்கண் வடமொழி நல்லிசைப் புலவர் மாமணியாய் விளங்கிய ஆசிரியர் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடகம் சொற்சுவை பொருட்சுவை நிரம்பித், தன்னைப் பயில்வார்க்கு நுண்ண றிவு பயந்து, கழிபெரு மகிழ்ச்சி விளைக்கும் பெற்றித்தாய் நிற்றலின், அதன் பெருமையைத் தமிழ்மக்களும் நன்குணர்ந்து களிக்கும் பொருட்டு, இற்றைக்கு 24-ஆண்டுகளுக்கு முன் அதனைத் தெளிவான செந்தமிழில் மொழிபெயர்த்திட்டேம். இது செய்யுட்களும் இடை இடையே விரவிய உரைநடையில் ஆக்கப்பட்டிருக்கின்றது. எழில் முதிர்ந்து உலகியற் பொருட் டோற்றங்களையும், மக்கள் வடிவங்களையும், அவர் தம் மன அசைவுகளையும் நுவலும் இடங்கள் உள்ளத்தைப் பெரிதும் இன்புறுத்துவனவாதலால், அவை தம்மை மிழற்றுதற்கு ஏற்பன இசை தழீஇ நடக்குஞ் செய்யுட்களேயாம். அத்துணை அழகு பயவாது பொதுவியல் ஒழுக்காய்ச் செல்லும் உரையாட்டு களும் பிறவும் விழுமிய பாநடைக்கு ஒவ்வாமையான் அவை யெல்லாம் உரை நடையின்பாற் படுத்தற்கே இசைந்தனவாகு மென்று பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இங்ஙனம் உரையும் பாட்டும் விரவிய இம் மொழி பெயர்ப்பு வடமொழியிலுள்ள முதல்நூலைச் சிறிதும் பிறழாமற் பின்பற்றிச் செல்வதாகும். இவ் விரண்டாம் பதிப்பு வடமொழியிலுள்ள பல முதல்நூல்களுடன் வைத்து ஒப்பிட்டு நோக்கிப் பலப்பல திருத்தங்கள் செய்யப் பட்டிருக்கின்றது. இன்னும், இம் மொழிபெயர்ப்பின் உரையிலுள்ள அருஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/183&oldid=1590230" இலிருந்து மீள்விக்கப்பட்டது