உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

  • தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

177

இந்நூலின்கண் அடங்கிய பதின்மூன்று கட்டுரைகளுந் தூய தனித்தமிழில் எழுதப்பட்டிருத்தலோடு, எல்லாரும் எளிதிற் கற்றுணரத்தக்க எளிய நடையிலும் அமைந் திருக்கின்றன. மேலும், இவற்றிலுள்ள பொருள்களும் எல்லார்க்கும் விளங்குவனவாய், அவர்க்கு மேலுமேலும் அறிவை வளர்க்கும் இயற்கை வாய்ந்து மிருக்கின்றன. யாம் எழுதிய மற்றை நூல்களிற் பெரும்பாலான சிறிதேனுங் கல்வியறிவு பெற்றவர்களுக்கே பயன்படுவனவா யிருக்க இந்நூற் கட்டுரைகள் மட்டும் எல்லார்க்கும் பயன்படும் இயல்பு கண்டு எமக்கு நண்பராய் உள்ளார் பலரும் இவற்றை யெல்லாம் ஒருங்கு திரட்டி ஒரு நூலாக வெளியிடல் வேண்டுமென்று கேட்டுக் காண்டதற் கிணங்கி, கிணங்கி, அவற்றை ங்ஙனம்

வெளியிடலானேன்.

சமரச சன்மார்க்க நிலையம்,

பல்லாவரம்,

1843

இங்ஙனம் வேதாசலம்

இரண்டாம் பதிப்பின் முகவுரை

முதற்பதிப்பில் இல்லாத ஐந்து நீண்ட கட்டுரைகள் இப்பதிப்பின்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவை: ‘கடவுள் நிலை', ‘கல்வியுங் கைத்தொழிலும்’, ‘பகுத்துணர்வும் மாதரும்’, 'தனித் தமிழ் மாட்சி', 'தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும்' என்பனவாகும். இதனால் இப்பதிப்பில் 80 பக்கங்கள் மிகுதியாகச் சேர்ந்துள்ளன.

முதற்பதிப்பிற் சிற்சில கட்டுரைகளிற் கலந்திருந்த சிற்சில வடசொற்களும் இப் பதிப்பின்கண் அறவே களைந்தெடுக்கப் பட்டன. அதனால் இந்நூற் கட்டுரைகளின் உரைநடை இன்னும் மிகுதியான செந்தமிழ்ச் சுவை வாய்ந்து நடத்தல்

காணலாம்.

1931

இங்ஙனம் மறைமலைகடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/210&oldid=1590257" இலிருந்து மீள்விக்கப்பட்டது