உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மறைமலையம் - 26

66

வள்ளன்மை யுடைய ராகலின், அவர் எம்மனோர்க்குத் தலைக்கணியாய் நிற்குந் தனிமுதன்மை யுடையரென்பது நினைவிற் பதிக்கற்பாற்று. மாணிக்கவாசகரைப் போல் இறைவனைக் கண்டு அவனருளை முற்றப் பெற்றார் பலர் அவர்க்கு முன் இருந்தது உண்மையா யிருக்கலாமேனும், அவரெல்லாந் தாங் கண்ட அருட்பெருங்காட்சிகளையும், அவற்றால் தாம் பெற்ற பேரின்ப நிலைகளையும், இறைவன் தமக்குச் செய்த அருட்பேருதவிகளையும், தாம் இறைவற்கு ஆளாய் நின்று உருகின வகைகளையும் வர்போற் செந்தமிழ்ப் பாக்களில் நிறைத்து யாமெல்லாம் பருகிக் களிக்க வழங்கியவரல்லர். மாணிக்க வாசகராற் கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு இன்மை கண்டபின்” என்று உயர்த்துப் பாடப்பெற்ற கண்ணப்ப நாயனார்தம் ஒப்பற்ற அன்பின் நிலையினையும் பிறர் வாயிலாக அறியப்பெறுகின்றன மேயன்றி, அவர் உற்ற அவ்வன்பின் வாயிலாகவே அறியப் பெறுகின்றனம் இல்லையே! மற்று, மாணிக்கவாசகப் பெருமானோ தாம் இறைவனைக் கண்டடைந்த இன்ப நிகழ்ச்சிகளையெல்லாம் நெஞ்சம் நெக்கு நெக்குருகக் கண்ணீர் ஆறாய்ப் பெருகக் குழைந்து குழைந்தலறித் தம் அருந்தமிழ்ச் செய்யுட்களில் மிழற்று கின்றார். இவரது இந் நிலையினை எளிதிலுணர விழைவார்க்கு,

66

"ஓய்வலாதன உவமனில் இறந்தன

ஒண்மலர்த் தாள் தந்து, நாயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறி காட்டித், தாயிலாகிய இன்னருள் புரிந்தஎன்

தலைவனை நனி காணேன்

தீயில் வீழ்கிலன் திண்வரை

நிகழ்ச்சிகளை

யுருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே.'

அவர்

என்று அவருளிச்செய்த ஒரு திருவாசகச் செய்யுளே போதும், ஏனை எல்லா மக்கட்கும் புலனாகாத அருவ நிலையில் நிற்கும் இறைவன் தம்பொருட்டுக் கட்புலனாம் மேதகும் அருளுருவிற் றோன்றித் தமக்கு அருள்செய்து உடனே மறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/219&oldid=1590266" இலிருந்து மீள்விக்கப்பட்டது