உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மறைமலையம் 26

“அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும் நீயும் அங்கெழுந்தருளி இங்கெனை இருத்தினாய் முறையோ வென் எம்பிரான்”

என்று திருச்சதகத்தும்,

"கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் புனவேயன வளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே எனைப்பிடித் தாட்கொண்டவா நயந்து நெஞ்சஞ் சினவேற்கண் நீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ'

என்று திருத்தெள்ளேணத்தும்,

“நான் தனக்கு அன்பின்மை நானும்தானும் அறிவோம் தான் என்னை யாட்கொண்டது எல்லாருந் தாமறிவார்." “கருவாய் உலகினுக்கு அப்புறமாய் இப்புறத்தே மிருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.” “நானும் என்சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத்தோம் தானுந் தன்தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்”

என்று

போந்த

அருமைத்

திருக்கோத்தும்பியினும் திருமொழிகள் என்றும் நினைவிற் பதிக்கற்பாலனவாகும். இங்ஙனமாக, எவரானுங் காணப்படாத அரும்பெரும் பேரின்பக்கடலினை நேரேகண்டு அதன்கட் டிளைத்துப் பேரின்ப வுருவான அடிகள் அருளிச்செய்த திருவாசகம் அவர் நுகர்ந்த அப்பேரின்பத் தேறலைத் தன்னிற் பொதிந்து வைத்திருத்தலின், அதனைப் பருகுவா ரெல்லாம் அப்பேரின்ப நிலையினை எளிதில் எய்துவரென்பது சொல்லவும் வேண்டுமோ? இத்துணை விழுமிதான திருவாசகத்தை ஓதியும் உருகாத ஓருயிர் இருக்குமாயின், அதனைக் கல்லென்று கழறுதுமோ, அன்றி மண்ணென்று வகுக்குதுமோ, இரும்பென்று இயம்புதுமோ, சொன்மின்கள்!

மேலுங் காணாமையின்

கடவுளை நேரே காணாதவர்கள், அதன் பேரின்பத்தை நுகர்ந்தறியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/221&oldid=1590268" இலிருந்து மீள்விக்கப்பட்டது