உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மறைமலையம் - 26

நன்கறியப் பெறுகின்றோம். கடவுளைக் கண் வரின் நிலைகளும், அவர் கண்ட காட்சிகளும் அவர்தாமே எடுத்துரைக்க வல்லுநரன்றி, எனையோர் வல்லுநர் ஆகார். புதிது விரிந்த ஒரு கொழுந் தாமரை மலரின் நறுமணமும் பெருநலனும் அது தானே நமக்கு விளங்கக் காட்டி நம்மை இன்புறுத்துமல்லால், அவற்றை வாயாற் சொல்வாரொருவர் அங்ஙனம் அவற்றைக் காட்டி நம்மை இன்புறுத்த மாட்டுவரோ? மேலும் ஓராசிரியரின் நிலைகளை எடுத்துரைக்கப் புகும் மற்றொருவர் அவர்பால் மிகுந்த பற்றுடையராயின், அளவிறப்பப் புகழ்தலோடமையாது;

அவரை

அவர்

காணாதவைகளைக் கண்டனவாகவுஞ் செய்யாதவைகளைச் செய்தனவாகவுஞ் சொல்லி உண்மைக்கு மாறான பொய்களைப் புனைந்து கட்டிவிடுவர். அங்ஙனமே ஓராசிரியற்பாற் பகைமை கொண்டாரொருவருந் தம் பகைமையை வெளிக் காட்டாது அகத்தடக்கி அவர்தம் நிலைகளைக் கூறப் புகுவராயின், இவர் அவரைக் குறிப்பாலிகழ்தலோடமை யாது, அவரிடத்தில்லாத குற்றங் குறைகளையெல்லாம் ஏற்றிப் பொய்யான பலவற்றையும் புனைந்து கட்டிவிடுவர். இவ்வாறாக, ஆசிரியரின் நிலைகளைக் கூறப் புகும் ஏனையோர்

இருதித்தினராய் அவர்தம் உண்மை நிலைகளைப் புரட்டிவிடும் பற்றியினராகவே பெரும்பாலுங் காணப்படுதலால், அவருரைகள் ஏற்கற்பாலன அல்ல. கடவுளைக் காண்டற்குரிய பேறு வாயாதவர்களையெல்லாம் அது வாய்த்தவர்களாகக் கட்டிவிட்டுப் பிறர் சொல்லிய கதைகட்கோர் அளவேயில்லை. ஆதலால், அத் தன்மையவாம் பொய்க்கதைகளுட் சேர்ந்தன வாகாமற், சைவசமய ஆசிரியன்மார் கடவுளை நேரே கண்டு தாம் எய்திய பேரின்ப நிலைகளும், தாம் பெற்ற அப் பேரின்ப நிலைகளை இவ் வையகமெல்லாம் பெறல் வேண்டுமெனக் கருதி அவர் செய்த செயற்கருஞ் செயல்களும் அவரருளிச் செய்த திருவாசக தேவாரச் செந்தமிழ் மாமறைகளிலிருந்தே நன்கு புலனாகிக் கமழ்தலால், அவர்தம் வரலாறுகளை உணர்ச்சியொன்றே பிறவிக்கடலிற் கிடந்துழலும் நம்மனோரைப் பேரின்பக் கரையில் ஏற்றவல்லதா மென்பதை யாவருங் கடைப்பிடித்தல் வேண்டும்.

ஆய்ந்துணரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/223&oldid=1590270" இலிருந்து மீள்விக்கப்பட்டது