உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் - 26

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

மெய்கண்ட தேவரின் சிவஞானபோதம் மொழி பெயர்ப்பு நூலென்பார் மயக்கங்களைந்து 'சிவஞான போதம் மொழிபெயர்ப்பு நூலன்று; அது மெய்கண்டான்

முதல் நூலே’ எனக்கூறும் அடிகளார், அதனைத்

திருக்குறளோடு ஒப்பாய்வு செய்துள்ளார்.

தன்

வயத்தனாதல், தூய உடம்பினனாதல்,

இயற்கையறிவினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, வரம்பிலின்ப முடைமை, முடிவிலாற்றலுடைமை என

'பதி'யின் இயல்புகளைக் கூறும் அடிகளார்.

அமையும்

'கலை' என்னும் சொல் 'கலா' என்னும் வடமொழித் திரிபாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அறிவி

அறியாமை அகற்றி, அறிவுடைமையும் னுருவும் தோற்றுவித்தலே இறைவனது உலகங்களின் படைப்பு நோக்கமாகும். ஆண் பெண் அமைப்பு முறைமைகளே முழுமுதற் கடவுளின் அறிவு, ஆற்றல் அருள் நலன்களுக்கான நற்சான்றுகளாகும். நற்சான்றுகளாகும். மற்றும் ஆணவ மலம், மாயை, இருவினை நிகழ்ச்சிகள், வீடுபேற்றின் மெய்ம்மை ஆகிய செய்திகளைச் சிவஞான போதம் மட்டுமே சிறப்புறச் சொல்லுகிறது என்னும் கருத்தினர் அடிகளார்.

டாக்டர் நா. செயப்பிரகாசு மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள் (பக். 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/35&oldid=1590076" இலிருந்து மீள்விக்கப்பட்டது