உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவம் 1

vii

புகழ் மாலை

"தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து பருமை

உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய மறைமலையடிகட்கு உண்டு. அவர் தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்.”

66

பல

அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் நூலாசிரியன்மாரை அளித்தது; அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது.

- திரு.வி.க மறைமலையடிகளின் மாண்பு - முன்னுரை

“தேனும் சொற்களால்

பாலும் போன்ற தூய

தீந்தமிழ்ச்

உரைநடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிர் அளித்தவர். மாநிலத்தில் மக்கள் உள்ளவரை மறையாப் புகழ் பெற்ற மறைமலையடிகளே.

ஞா. தேவநேயப் பாவாணர்; வடமொழி வரலாறு; முன்னுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/8&oldid=1590049" இலிருந்து மீள்விக்கப்பட்டது