உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

❖ ❖ மறைமலையம் - 27

கொள்கையை உண்மைப் படுத்திக் கொள்ள முடியாமை கண்டு ஏதாவதொன்றைத் தமக்கு மேற்பட்டதாக வைத்து வணங்கி வருகின்றார்கள். இங்ஙனமாக ஒன்றோடொன்று மாறுபட்ட கொள்கை உடையவர்களெல்லாருங் கடைசியாகக் கைக் கொண்டது ‘தமக்கு மேற்பட்ட ஒரு பேரறிவுப் பொருள் வணக்கமே' ஆகும். இம் முடிந்த கொள்கையில் எல்லாச் சமயிகளும் உடன்பாடு உடையவராய் இருக்கின்றனர்.

கட்டப்

இனி, மக்கள் எல்லாரும் இங்ஙனந் தம்மின் மேற்பட்ட ஒரு பேரறிவுப் பொருளின் உதவியை விரும்பி நிற்றல் எதன் பொருட்டு என்று ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்குங்கால், அவர் தமது துன்பத்தை நீக்கிக்கொள்ளுதற்கும் இன்பத்தைப் பெறுதற்குமேயாம் என்னும் உண்மை புலனாகும். மக்கள் மட்டுமே யல்லர், மக்களினுந் தாழ்ந்த எல்லா உயிர்களுங் கூடத் தமது துன்பத்தைப் போக்கி இன்பத்தை ஆக்கிக் கொள்ளவே முயன்று நிற்கின்றன. இங்ஙனம் நம் கண்ணெதிரே காணப்படுகின்ற வுண்மையைக்கொண்டு, காண்டு, எல்லா உயிர்களும் இப்போது துன்பக் கயிற்றாற் பட்டிருக்கின்றன வென்றும், இத் துனபக்கயிற்றை அறுக்கவும் இன்பவெள்ளத்தைப் பெருக்கவுந் தம்மால் ஆகாமையின், துன்பத்தினின்றுந் தம்மை விடுவித்து இன்பத்தை ஊட்ட வல்ல முழுமுதற்கடவுளின் உதவியைப் பெறுதற்கு அவை பெரிதும் விரும்பி நிற்கின்றன வென்றும் நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றனம் அல்லமோ? இன்னும் இறப்பு பிறப்பு, நோய், மூப்புக், கவலை, இழப்பு முதலான பலதிறப்பட்ட வடிவங்களிற் றோன்றுந் துன்பங்கள் அத்தனையும் எல்லா உயிர்களையும் வருத்தி வரக்காண்கின்றோ மாதலால், இத் துன்பங்கள் உ டையோர் வேறுவகையில் எவ்வளவு உயர்ந் தோராயினும் உயிர்களே யல்லாமற் கடவுளாகமாட்டார். இவ்வுயிர்களை இத் துன்பத்தினின்றும் மீட்டு, இவற்றிற்கு இன்பத்தைத் தருங் கடவுள் ஒருவரே எவ்வகைத் துன்பமும் இல்லாதவர், எல்லா இன்பமும் ஒருங்கே

ன்

உடை யவர். இதுவே துவே க கடவுளுக்கு உண்மையான தன்மையென்பதை எல்லாச் சமயிகளும் உ பட்டு உரைப்பார்களாயினுஞ், சைவ சமயத்தில் மட்டும் அவ்வுண்மை முன்னுக்குப்பின் மாறில்லாமற் காணப்படு கின்றது; மற்றைச்சமயத்தவர்களோ இறப்புப் பிறப்பு முதலான மேற்கூறிய துன்பங்களிற்

கிடந்து உழன்ற வர்களை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/309&oldid=1591279" இலிருந்து மீள்விக்கப்பட்டது