உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தமிழ்த் தாயின்

நெஞ்சு புரையோடாதும், தமிழர் அறை போகாதும் காத்தது. தமிழின் வயிற்றில் இருந்து முன்பு பல திராவிட மொழிகள் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியது போல, மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழை இன்னும் குன்றிக் குலையாதவாறு தடுத்தது. இன்று பாட நூல்கள் பெரும்பாலும் தமிழ் வடிவாக வருகின்றன. ஒருசார் இளைஞர் கூட்டம் எழுத்தாளர் கூட்டம் குடிநீரைக் தூயநீராகக் காத்தல் போலத் தமிழைத் தூயதாகக் காத்து வருகின்றன. கலப்பு மிகுதியிருந்தாலும் பல செய்தித் தாள்கள் தமிழ்த் தூய்மையையும் முடிந்த அளவில் பேணி வருகின்றன. வாழ்த்துக்கள் வரவேற்புகள் அழைப்பிதழ்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பைங்கூழ் வளரும் பைந்நிலங்களாக மிளிர்கின்றன. இந்நன் மாற்றங்களையெல்லாம் மறைமலையடிகளைப் பெற்றமையால் தமிழ்த்தாய் பெற்றாள். ஆதலின், தமிழ் தனித்தடத்தில் செல்லும் புகைவண்டி போலப் பழைய புதிய தன் சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி முன்னேறும் என்று உறுதி கொள்வோம்”

- வ.சுப. மாணிக்கனார்

உழை

உயர் உதவு

2, சிங்காரவேலர் தெரு,

தியாகராயர் நகர், சென்னை

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

600 017

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/346&oldid=1591317" இலிருந்து மீள்விக்கப்பட்டது