உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்று யான் அவரைச் சொல்லாலும் எழுத்தாலும் போற்றுவதுண்டு. வேதாசலனார் தமிழ் செந்தமிழ்-சங்கத்தமிழ் என்னை அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுவையைத் தமிழ்நாட்டுக்கு ஊட்டிய பெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறுவேன்.'

திரு.வி.க.

மறைமலையடிகள் ஓர் கல்விக்கடல், தமிழ், ஆங்கிலம், வடமொழி மூன்றையும் கற்றுத் துறைபோய மாபெரும் புலவர். அவருடைய வாழ்வு என்பது தமிழ் மறுமலர்ச்சியின் வரலாறாகும். அவர்தம் தமிழ்ப்புலமையும், வடமொழிப் புலமையும், ஆங்கிலப் புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும், தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது.

திருமதி. சாரதா நம்பிஆரூரன்

உழை

உயர் உதவு

2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை

தமிழ்மண் தொலைபேசி : 044 24339030

600 017

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/322&oldid=1591660" இலிருந்து மீள்விக்கப்பட்டது