உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

84

-

மறைமலையம் - 29

1

க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நான்கு வகுப்புகள் பிரிந்தன. இந் நால்வகைச் சாதியாரும் ஒரே தந்தைக்குப் பிள்ளைகளாய்ப் பிறந்து நால்வேறு தொழிலால் நால்வகைப்பட்டார்களே யல்லாமல் அவர்களுள்ளும் உண்ணல் கலத்தல்களில் ஏதும் வேற்றுமை ஏற்பட்டதில்லை. சூத்திரன் சமையல் செய்த உணவைப் பார்ப்பனன் அருந்தும் முறை பழைய கற்பசூத்திரங்களிற் சொல்லப்பட் டிருக்கின்றது. வாயுபுராணத்தும் பின் வருமாறு சொல்லப்பட்டிருக் கின்றது. 'கிருதயுகத்தின்கண் சாதிகள் ஏதுமே இல்லை; அதன்பின்னர் நான்முகன் அவ்வவர் தொழில்களுக்கு ஏற்ப மக்களுள் நான்கு வகுப்புகள் ஏற்படுத்தினான். பிறரை ஆளுதற்கேற்ற ஆண்மைச்செய லுடையவர்களைப் பிறரைக் காக்கும் பொருட்டு க்ஷத்திரியரென்று நியமித்தான். தந்நயம் பாராட்டாமற் பிறர் நலங் கருதி உண்மையே பேசி வேதத்தைச் செவ்வையாக ஓதினவரைப் பிராமணர் என வைத்தான்.முன்னே வலியற்றவர்களாய் நிலத்தை உழுவதிலும் கைத்தொழில் புரிவதிலுந் தலையிட்டு உழவினால் உயிர் வாழ்க்கைக்கு வேண்டுவனவற்றை எடுத்துத் தந்தவர்களை வைசியர் என வைத்தான். துப்புரவு செய்பவர்களாய் ஏவிய தொழில்மட்டுஞ் செய்யும் வலியற்றவர்களைச் சூத்திரர் என்று வைத்தான். வ்வாயுபுராண உரையுள்ளும் சாதியானது தொழில்பற்றி வந்ததென்று சொல்லப்பட் டிருக்கின்றதே யல்லாமற், பிறப்பினால் வந்ததென்று சிறிதும் சொல்லப்படவில்லை. இனி, இந்நால்வகைச் சாதியா ருள்ளும் எவர் உயர்ந்தோர் எவர் தாழ்ந்தோர் என்று வினாவுங்கால், ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்த சாதியா ரெனவும், ஒழுக்கமில்லாதவரே தாழ்ந்த சாதியா ரெனவும், மகாபாரதம் சாந்தி பருவத்தின் கண் (6925) றுதிப்படுத் துரைக்கப்பட்டிருக்கின்றது. அப்பகுதி வருமாறு: "பாரத்துவாச முனிவர் பிருகு முனிவரை முனிவரை வினாவு

கின்றார்:”

66

'நால்வகைச் சாதிவேற்றுமைக்கும் நிறந்தான் ஏதுவாகு மென்று சொன்னால் எல்லாச் சாதியுள்ளும் நிறங்கள் பல திறப்பட்டுத் தோன்றுகின்றன.’

66

விருப்பும் வெகுளியும் அச்சமும் பேரவாவும் கலக்கமும் கவலையும் பசியும் களைப்பும் நம்மெல்லாரிடத்தும் மிகுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/109&oldid=1591774" இலிருந்து மீள்விக்கப்பட்டது