உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

66

-

மறைமலையம் - 29

முதலிற், பிராமணன் என்பது உயிரா? அன்று. கழிந்து போன பல உடம்புகளிலும், இனி வரக்கடவ பல உடம்பு களிலும் புகுந்தும் புகுவதாயும் வருவது ஓர் உயிரேயாக லானும், வினைக்கீடாகக்கிடைத்த பலதிற உடம்பு களிலிருந்து வரும் உ உயிர் ஒன்றேயாகலானும் உயிர் பிராமணன் ஆக மாட்டாது.

66

அற்றேற், பிராமணன் என்பது உடம்பா? அன்று. ஐவகைப் பொருள்களால் ஆக்கப்பட்ட உடம்பான சண்டாளன் ஈறாக எல்லா மாந்தர்க்கும் ஒரே தன்மைத்தாய் இருத்தலானும், முதுமையும் இறப்பும் அறமும் (தர்மமும்) மறமும் (பாவமும்) அவர்களெல்லார்மட்டும் பொதுமையில் நிகழ்தலானும், பார்ப்பன ரெல்லாரும் வெண்ணிறத் தினராயும் அரச ரெல்லாரும் செந்நிறத்தினராயும் வணிக ரெல்லாரும் மஞ்சள் நிறத்தினராயும் அடியோரெல்லாரும் கருநிறத் தினராயுமே இருப்பரென வரையறுத்த வேறுபாடு யாண்டும் இல்லாமை யானும், தன் றந்தை முதலாயினார் பிணத்தைச் சுடுகையில் ஒரு பார்ப்பனனைக் கொன்ற பழி புதல்வர் முதலாயினார்க்குச் சேருமாதலானும் உடம்பு பிராமணன் ஆகமாட்டாது.

66

இனிப், பிராமணன் என்பது ஒரு வகுப்பா? அன்று மகருஷிகள் (பெரிய முனிவரர்) பலர் படைப்பின்கண் உள்ள மற்றை வகையினரிலிருந்துஞ் சாதியினரிலிருந்துந் தோன்றினர். ருஷியசிருங்கர் ஒரு மான்வயிற்றி பிறந்தார்; கௌசிகர் குசைப்புல்லிற் பிறந்தார்; ஜாம்புகர் ஒரு நரிவயிற்றிற் பிறந்தார்; வால்மீகி ஒரு புற்றிலிருந்து உண்டானார்; வியாசர் ஒரு செம்படவன் மகள்வயிற்றிற் பிறந்தார்; கௌதமர் ஒருமுயலின் பிட்டத்திலிருந்து உண்டானார்; வசிட்டர் ஊர்வசி என்னுந் தாசிவயிற்றிற் பிறந்தார்; அகத்தியர் ஒரு கும்பத்தில் (குடத்தில்) உண்டானார்; இவ்வாறு யாங்கள் சொல்லக்கேட்டோம். இவர்களுட் சாதிக்குப் புறம்பானாருங்கூடப், பிரமஞானத்தைக் (கடவுளுணர்ச்சியை) அறிவுறுக்கும் ஆசிரியரில் முதற்கண் நின்றார்கள்; ஆதலால், ஒரு வகுப்பும் பிராமணனாக மாட்டாது.

“அற்றேற், பிராமணனென்பது ஞானமா? (அறிவா?). அன்று. கடவுளுண்மையினை அறிவதில் நிரம்பத் தேர்ச்சி பெற்ற க்ஷத்திரியரும் மற்றையோரும் பலர் உளராகலின், ஞானம் பிராமணன் ஆகமாட்டாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/113&oldid=1591778" இலிருந்து மீள்விக்கப்பட்டது