உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் 29 -

காடுத்து உறவுகலத்தலும் இன்றுகாறும் நடைபெற்று வருகின்றனர்.

இனி, உழுதுண் வேளாளரும், குற்றேவல்செய்வாரும் பல கைத் தொழில் புரியும் பதினெண்மரும் மேற்காட்டிய மூவகையினரைப்போற் செல்வராய் இல்லாமையினாலும், நாள்முழுதுந் தொழில்கள் பல இயற்றுதலாற் கல்விகற்க ஒழிவுநேரம் பெறாமையினாலும், உயர்ந்த ணவுப் பண்டங்களை மேலோர் மூவர்க்கும் ஒப்படைத்து விட்டுத் தாம் விலைகுறைந்த வரகின்கூழ், இலைக்கறி, மீன் முதலான சிற்றுயிர்களின் ஊன் என்பவற்றை உணவாகக்கொண்டு உயிர் டு வாழ்ந்தமையினாலுங் கீழோர் ஆயினர்.

66

வ்வாறு இயற்கைத் தொழின்முறையால் மருதநில மாந்தரே அந்தணர், அரசர், வணிகர், அடியோர், வினைவலர் என்னும் ஐம்பெரும் பிரிவினராயினர். இவ் ஐவகையினரில் அடியோரும் வினைவலரும் ஒருவகையில் அடக்கப்பட்டுக் 'கீழோர்' எனவும், 'இழிந்தோர்' எனவும் வழங்கப்படுவா ராயினர். இவர் தம்முள் உழுவித்துண் வேளாளர் அரசர் வகுப்பினும், உழுதுண்வேளாளர் ‘அடியோர் வினைவலர் பாங்கினும்” அடங்காநிற்பர். பதினெண்டொழில புரிவாரைத் தவிர, ஏனை அந்தணரும் அரசரும் உழுவித்துண் வேளாளரும் வணிகரும் உழுதுண்வேளாளரும் எல்லாம், முதன்முதல் வேளாண்மைத் தொழிலைக் கண்டறிந்த வேளாளரினின்றும் பிரிந்தோரேயாவர் என்பதனை மேலே விளக்கினாம்; வேளாண்மைத் தொழிலை முன்னறியாத தமிழ் மக்கள் அதனை முன்னறிந்த அவ்வேளாளர் ஏவிய பற்பல கைத்தொழில்களைச் செய்துவந்தமையின், அத்தொழில்கள் பதினெண்வகையவாய்ப் பகுக்கப்பட்டு அவற்றைச் செய்யும் பதினெண் வகுப்பாரும் வேளாளர் அல்லாத பிறவகுப்பில் ஒரு தாகைப்படுத்து வைக்கப்படுவாராயினர். தொழில் பற்றிய செந்தமிழ்த் தொல்லாசிரியரான

வ்

வகுப்புமுறை

தால்காப்பியனார்,

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக்கமும், இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/133&oldid=1591799" இலிருந்து மீள்விக்கப்பட்டது