உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

நாம்

-

மறைமலையம் - 29

இத்தகைய வேறுபாடு மிகுந்து காணப்படாமை இஞ்ஞான்றும் கண்கூடாய்க் காணலாம். குறிஞ்சிநிலத் துள்ள வேட்டுவரும், முல்லைநிலத் துள்ள ஆயரும், பாலைநிலத்துள்ள எயினரும், நெய்தல்நிலத் துள்ள செம்படவரும் தத்தம் வாழ்க்கைக் குரிய வேட்ட மாடுதல், நெய் பால் தயிர் விற்றல், ஆறலைத்தல், மீன்பிடித்து விற்றல் முதலான ஒரோவொரு தொழிலையே செய்து செல்வமிலராய் வயிறு வளர்த்தலானும், இவர்தந் தொழிற்குத் துணையாக வேண்டப்படும் பிற தொழில்கள் இன்மையானும், இம்மக்களுட் சாதிவேற்றுமை லதாயிற்று; மற்று, மருதநிலத்து மாந்தர் செய்யும் உழவு தாழிலுக்கோ பலவேறு கைத்தொழில்களின் உதவி வேண்டியிருத்தலானும், அவ் வுழவுதொழில் உகலத்தில் நடைபெறும் நாகரிகநிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பிறப்பித்து அவற்றிற்கெல்லாம் அடிப் படையாய் நிற்றலானும், அதனையுடைய மாந்தர்தமக் குள்ளேதான் எல்லா வகையான வேறுபாடுகளுங் கிளைப்ப ஆயின என்றறிதல் வேண்டும்.

ஆகவே, சாதி வேற்றுமை முதன்முதல் உண்டானது, உழவு தொழிலைச் செவ்வனே யறிந்து அதனைத் திறம்பட நடத்தி நாகரிக முற்ற தமிழ்மக்கட்குள்ளேதா னென்பது பெரிதும் நினைவிற் தமிழ் மக்கள் நிலையும், இந்திய நாட்டுக்குப் புறம்பேயிருந்து வந்து இதன்கண் இருக்க இடம் பெற்ற ஆ ஆரியமக்களின் நிலையும் ஒத்த இயல்பினவாய் நாகரிகம் அற்றனவாய் இருந்ததனைத் தமிழ்ப் பண்டை நூலாகிய தொல்காப்பியத்தானும், வடமொழிப் பண்டை நூலாகிய இருக்குவேதத்தானும் நன்கறிகின்றேமாகலின், சாதிவேற்றுமை யினை முதற்கண் உண்டாக்கினவர்கள் மருதநிலம் அல்லாத மற்றைநிலத் தமிழ்மக்களும் அல்லர், புறம்பேயிருந்து வந்த ஆரியமக்களும் அல்லர். உழவு தொழிலையறிந்து நடத்திய தமிழவேளாளர்களே தாம் சென்ற சென்ற இடங்கடோறுஞ் சாதி வேற்றுமையினை உண்டாக்கினர். வேளாளர் மலிந்த இத் தென்றமிழ்நாட்டின் கட் சாதிவேற்றுமையின் கொடுமை காணப்படுமாறுபோல், வடநாட்டின்கட் சாதிவேற்றுமை அத்துணைக் காடுமை யாகக் காணப்படுகின்றிலது. வடநாட்டின்கண் ஒரேயறையிற் பார்ப்பனரும் பார்ப்பனர் அல்லாத பிறரும் ஒருவரை யொருவர் காண அருகிருந்து

த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/139&oldid=1591805" இலிருந்து மீள்விக்கப்பட்டது