உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

119

இனி, இவ்வாறு பல்வேறுவகையினராய்ப் பிரிந்த சாதியாருள்ளும் மகளிரது ஒழுக்கத்தால் உயர்ந்தோருந் தாழ்ந்தோருமாய்ப் பிளவு பட்ட சிறுச்சிறு வகுப்பாரும் பற்பலர். கொண்டானைவிட்டுப் பிறன் தோள்தோய்ந்த மகளிரும் அவரைச் சேர்ந்தாரும் ஒரு சாதியினுள்ளேயே இழிந்தவகுப்பினர் ஆயினர். முதலில் ஒரு கூட்டத்தினராய் இருந்த மருதநிலத் தமிழ்மக்களே பின்னர் நாட்செல்லச் செல்ல இங்ஙனமெல்லாம் பற்பல கூறுகளாய்ப் பகுக்கப் படுதற்கு ஏதுவாய் இருந்தவைகள்: கொல்லாமை புலால் உண்ணாமை யும், அகந்தூய்மை புறந்தூய்மை கல்வி கடவுள் வழிபாடும், மகளிர் ஒழுக்கமுமேயா மென்பதனைக் கடைப்பிடித்து

உணர்ந்துகொள்க.

ங்ஙனம், பிறவுயிர்க்குத் துன்பம் பயவாத தூய உணவையும், தன் உடம்பும் உயிரும் தூயவாதற்கு ஏற்ற முறைகளையும், இன்ப வேட்கையை நெறிதவறாமல் நுகருதற்குரிய வகைகளையுங் கைப்பற்றி யொழுகும் வரையில், அங்ஙனங் கைப்பற்றி யொழுகுவார் எக்குடிப் பிறந்தோராயினும் அவர் உயர்ந்தோராகப் பாராட்டப்படுதற் குரிய விழுப்பம் வாய்ந்தோராதலைச், செந்தமிழ்த்தொல்லா சிரியராகிய தொல்காப்பியனார் தமது காலத்திருந்த மருதநில மாந்தரையும் பிறநிலத்தாரையும் அவ்வவர் தொழின்முறைபற்றிப் பகுத்து ஓதியவாறு பற்றி இவ்வியலில் இதுகாறும் விளக்கிக் காட்டினாம். தூயவுணவானுந் தூய செயலானும் உயர்ந்தோருந் தாழ்ந்தோருமாய்ப் பிரித்துப் பாராட்டப்பட்டோர் தத்தம் ஒழுக்கங்களின் வழுவியவழி உயர்ந்த சாதியாராகப் பாராட்டப்படவில்லை என்பதற்குத், தொல்காப்பியனார்க்குப் பின் பண்டைத் தெய்வ ஆசிரியராய்த் தோன்றிய திருவள்ளுவ நாயனார் இரண்டாயிர ஆண்டு களுக்கு முன்னரே,

“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”

“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்”

(14, 3, 4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/144&oldid=1591810" இலிருந்து மீள்விக்கப்பட்டது