உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும் உவராதே அவரவரைக் கண்ட போதே

யுகந்தடிமைத் திறம் நினைந்தங் குவந்து நோக்கி இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி

இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக் கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.'

135

எனவும் போந்த திருவுரைகளையும் போலிச்சைவர் உணரார் கொல்லோ!

இங்ஙனம் வேடத்தைக் கண்ட அளவானே வேற்றுமை பாராது அவர்களோடு அளவளாவுதல் வேண்டுமென அறிவுநூல்கள் கட்டளையிடுமானால், அவ்வேடத்தோடு கல்வியும் நல்லியல்பும் நல்லொழுக்கமும், மெய்யறிவும், சிவநேயமும் உடையாரை எவ்வளவு கொண்டாடி அவரோடு அளவளாவி அன்புபாராட்டல்வேண்டும்! இவற்றை யெல்லாம் ஒருசிறிதும் நோக்காது வெறுஞ் சோற்றுக்கே அழுது தீவினையை ஈட்டும் போலிச்சைவர் வேறு என்கடவர் என்க.

வை தம்மையெல்லாந் தெரிதற்குரிய பெருங்கல்வி போலிச் சைவர்மாட் டில்லையாயினும், பள்ளிக்கூடச் சிறுவர் நாடோறும் ஓதிவரும்,

“சாதி இரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால்

66

நீதிவழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கி லுள்ளபடி.

“கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்

நெல்லினுட் பிறந்த பதராகும்மே.”

என்னும் பிற்காலத்து அரிய அறநூலின் அறிவுரை களையேனும் அவர் தெரியப்பெறாதது பெரிதும் வருந்தத்தக்க தொன்றாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/160&oldid=1591827" இலிருந்து மீள்விக்கப்பட்டது