உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

137

சோறு

என்று அருளிச்செய்ததை அறியாயோ? பெண்களுடைய ய பேச்சை நம்பி நான் என் தகப்பனுக்கே பிறந்தேன் என்றும், பிறர் தகப்பன் பெயர் தெரியாதவர் என்றும் இகழ்ந்து பேசாதே. மறைவிலே பிறனுக்குக் கருக்கொண்டு பெற்ற பிள்ளைகளை மாதர்கள் தங்கணவன் பெயரால் வளர்த்து விடும் நிகழ்ச்சிகள் எண்ணிறந்தன. மிகவும் மறைவாய் நடந்த அவைகளைத் தெரிந்த சிலர் அவைகளைச் சில ஏதுக்கள் பற்றி வெளிவிடாமையால் அவை மறைபொருளாகவே நின்றுவிடுகின்றன. உன் இழிந்த தன்மைகளையும் செய்கை களையும் பார்த்தால், நீ உண்மையான சைவனுக்குப் பிறந்தாய் அல்லை என்பது எமக்குத் தோன்றுகின்றது. நீ யாருக்குப் பிறந்தால் எமக்காவதென்னை? நீ தேவாரம் ஓதி என்செய? திருவாசகம் படித்து என்செய? உன் மன அழுக்கு உன்னைவிட்டு நீங்கிற்றில்லையே. ஆதீனங்களில் உடனிருந்து தின்னுவதை ஒரு பெருமையாகப் பேசிக்கொள்ளு கின்றாய். நாங்கள் கேள்விப்பட்ட மட்டில் இப்போது சைவமடாதீனங்கள் பலவற்றில் உள்ளவர்கள் துறவிகள் என்று பெயர்மட்டும் உடை யவர்களாக இருக்கின்றார்களே அல்லாமல், அவர்கள் உலக வாழ்க்கையில் ஒழுக்கங்கெட்ட வர்களினும் மிக இழிந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்றும், அளவிறந்த அறப்பொருள்களை வைத்துக்கொண்டு அவற்றை நல்வழியிற் பயன்படுத்தாமல் தீய வழிகளில் அவற்றை வாரிவாரி இறைக்கின்றார்கள் என்றும் கேள்வி யுறுகின்றோம். அப்படி யிருந்தால் அவர்களோடு உடனிருந்து சோறுதின்னுவதில் உனக்கு யாது பெருமை வந்துவிட்டது? அவ்வாதீனங்களுக்கு உண்மை யறிவுடையோர்கள் செல்வ தில்லை யென்றுங் கேள்விப்படுகிறோம். சோற்றையும் L பணத்தையும் விரும்பினவர்கள் அங்கே சென்று அவர்களுக்கு இனிக்கப் பேசிக் காலங் கழிக்கின்றார்களாம். பிறரைச் சேராமல் தாமே கூடியிருந்து சோறு தின்பவரைப் பற்றிப் பெருமை பேசிக் காள்ளுகின்றாய். அப்படியானால் பிறவற்றைக் கிட்டே சிறிதும் அணுகவிடாமல் தாமாகவே தீனி தின்னுஞ் சில விலங்குகள் அவர்களை விடச் சிறந்தன என்றன்றோ சொல்லல் வேண்டும்? உன் அறிவு ஆ! எவ்வளவு உயர்ந்தது! அது நிற்கட்டும். நீ உனக்குள்ள தீய தன்மை தீய செயல்களினின்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/162&oldid=1591829" இலிருந்து மீள்விக்கப்பட்டது