உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

142

  • மறைமலையம் -29

தளிந்துணர்க. தாய்தந்தையரும் அவருக்கு நெருங்கிய உறவினரும் நல்லியல்பு நற்செய்கையிற் சிறந்து விளங்குப வராயின், அவர் கூட்டத்தை நற்குடி என்றும், அந்நற்குடியிற் பிறந்த பிள்ளையினிடத்து அந் நல்லியல்பு நற்செய்கைகள் அமையப்பெறும் என்றுங் கூறுதலே நாயனார்க்குக் கருத்தாதல் தக்கார் தகவிலரென்ப தவரவர், எச்சத்தாற் காணப்படும்” என்னும் அவர் திருமொழியால் நன்கு துணியப்படும். ஒழுக்கத்தினாலேதான் குலத்தினுயர்வு பெறப்படும் என்று தமதுநூல் முழுதும் வற்புறுத்திச் சொல்லும் திருவள்ளுவ நாயனாரையும் தமது புல்லறிவுக்குத் துணைகொண்டு சேர்க்கப்பார்க்கும் போலிச்சைவர் தம் கருத்து நிறைவேற வேறு எதுதான் செய்யமாட்டார்! அது நிற்க.

அங்ஙனம் ஒழுக்கத்தினாலேயே உயர்வு பெறப்படல் வேண்டுமாயின், திருநாளைப் போவாரென்னும் நந்தனார் சிவத்தொண்டில் தாம் மிக முதிர்ச்சியுடையராயிருந்தும் தமது குலத்தின் இழிவு நோக்கித் தில்லைக்கோயிலுட்புகாமற் புறத்தே ஒதுங்கி நின்றதும், சிவபெருமான் அவரை உட்புகுவித்தல் வேண்டி தில்லைவாழ் அந்தணரைக்கொண்டு தீவளர்ப்பித்து அதன்கண் நந்தனாரை முழுகுவித்துத் தேவவடிவாக எழச்செய்து பின்னர் உள்ளே ஏற்றுக் கொண்டதும் என்னை யென்றாற்; பறைச்சாதி மற்றைச் சாதிகளைப் போல்வதன்று; மிகவுந் தூயதாய் எல்லாத் தேவர்களும் தன்கண் அமையப் பெற்றதென்று சிவதரு மோத்தரத்திற் பாராட்டப்பட்டதாய்ச் சிவபெருமானுக்குப் பால் தயிர் நீர் சாணாகம் என்னும் ஐந்தினைக் கொடுப்பதாய் உள்ள ஆவினை அச்சாதியார் கொன்று அவற்றின் இறைச்சியை யுண்ணும் புலைத்தொழிலிற் பழகியவராவர்;

ம்

இ து

ங்ஙனம் மிகக் கொடிதான புலை யொழுக்கத்திற் பயின்றது பற்றியே பறைச்சாதி ஏனை எல்லாச் சாதிகளிலும் இழிவடைய லாயிற்று; இங்ஙனம் இது தாழ்வடையலானதும் ஒழுக்கத் தாழ்வினாலேதான். மற்றச் சாதியாரெல்லாம் ஒன்றுகூடி உறையும் நாடு நகரங்களுக்குப் புறத்தே விலக்கமாகப் பறைச்சேரி அமைக்கப்பட்டிருத்தலும் இந்த ஏதுவினாலே தான். இத்தன்மையதான அறிவில்லாப் புலைச்சாதியில் நந்தனார் பிறந்தமையினாலே இவரது பெருமையைப் பிறர் அறியார் என்றெண்ணி என்றெண்ணி அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/167&oldid=1591834" இலிருந்து மீள்விக்கப்பட்டது