உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

152

மறைமலையம் -29 -

இம்

நடப்பித்தலிலும், உழவுதொழிலாற் பெற்ற பண்டங்களைக் கொண்டுவிற்றலிலும் நின்றோர் ‘அரசர்’, ‘வணிகர்' என வேறிரண்டு இனங்களாய்ப் பிரிந்தமையினையும், முத்திறத்தார்க்கும் இன்றியமையாத பதினெண் டொழில் களையும் ஏவற்றொழிலையும் புரிந்தோர் 'அடியோர்’, வினைவலர்’ என்னுஞ் சூத்திரரானமையினையும், இந் நாற்பெரும் பிரிவினரிலுந் தத்தம் மகளிரது ஒழுக்கத்தால் மேலும் பற்பல பிரிவுகள் உண்டானமையினையும் விரித்து விளக்கிப்போந்தாம். எனவே, இத்தென்றமிழ் நாட்டின்கட் சாதிவேற்றுமைகளைப் பிறப்பித்தற்கு அடிப்படை மூலங்களாய் நின்றவை: ஊன் உண்ணாமை, கல்வி, கடவுள் வழிபாடு, அகந்தூய்மை, புறந்தூய்மை, மகளிரது ஒழுக்கம் என்பவை களேயாமென்பது நன்கு புலனாகின்ற தன்றோ? சாதி வேற்றுமைகளைப் பல்குவித்தற்கு ஏதுவாய் நின்ற இம் மூலங்களைக்கொண்டே சாதிவேற்றுமைகளை ஒழித்தற்கு வழிதேடல் வேண்டுமென்று உணர்ந்து உணர்ந்துகொள்க. அஃது யாங்ஙனமெனின், அடைவே விளக்கிக்காட்டுதும்.

முதலாவது 'புலால்உண்ணா ஒழுக்கமே தன்னைக் கைக்கொண்டு ஒழுகிய மக்களை மக்களை உயர்ந்த சாதியாராக ஆக்கினமையாற், புலால் உண்ணாதவர் எவராயிருப்பினும் அவரை ‘அந்தணர்’, ‘பார்ப்பனர்’, ‘சைவவேளாளர்' என்று கூறுதல்வேண்டும். அங்ஙனம் புலால் உண்ணா ஒழுக்கத்தைக் கைக்கொண்டோரை, அவர் பிறந்த இழிகுலப் பெயரால் அழைத்தலும், முன்னரே சைவராய் உள்ளார் அவரைத் தம்முடன் சேர்த்து உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல் அவரை அவ்வழிகுலத்திலேயே இருக்கவிடுதலும் பெருந் தீவினையாம். எங்ஙனமெனில், ஊன் உண்பார் ஒருவர் அவ்வூன் உணவு கொள்ளும் பெருந்தீவினைப் படுகுழியி னின்றும் மேலேறுவராயின், ஊன்உண்ணா மேல் நிலையில் நிற்போர் அவரைக் கைகொடுத்துத் தூக்கித் தம்மோடு உடன் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்; அவ்வாறு செய்யின் அங்ஙனஞ் சேர்த்துக்கொள்ளப்பட்டோர் கொல்லா அறத்தில் வழுவாது நிற்பர்; அதனால் எத்தனையோ மீன்கள், கோழிகள், ஆடுகள், மாடுகள் முதலிய உயிர்கள் உயிர் பிழைக்கும்! அவ்வாறு அம் மேலோர் அவரை மேலே தூக்கி விடாமல் அப்பாழ்ங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/177&oldid=1591845" இலிருந்து மீள்விக்கப்பட்டது