உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

155

தலையெடுப்போடும் பேசுகின்றார்கள். இப்படித் தம்மிற் சிலர்க்குள் மட்டும் உண்ணல் கலத்தல்களைச் செய்வதால், தமக்காவது பிறர்க்காவது இவர்கள் செய்த நன்மையாது? அதனால் இவர்கள் தேவர்களாய் விட்டார்களா? அல்லது இவர்களின் உடம்பு எவர்க்கும் இல்லாத பொன்னுடம்பு ஆய்விட்டதா? அல்லது அறிவிற் பெரியவராகிக் கடவுளை நேரே கண்டு விட்டார்களா? அப்படியொன்றும் இல்லையே. மற்றை எல்லாரையும் போல்ச் சிலநேரங்களில் மற்றை யோரைவிடப் போலிச்சைவர்கள் மிக இழிந்த செயல்களையுஞ் செய்யக் காண்கின்றோமே. தம்மைச் சைவரெனக் கருதி இறுமாப் போரில் எத்தனை பேர் பொதுமகளிர் வீட்டிற் புலைத் தொழில் செய்து கிடக்கின்றனர்! எத்தனைபேர் சீமைச் சாராயமும் வறுத்த ஆட்டிறைச்சியுங் கோழி முட்டையும் மறைவில் உட்கொள்கின்றனர்! எத்தனைபேர் சூதாட்டத் திற்கு காலங் கழிக்கின்றனர்! எத்தனைபேர் பிறர் பொருளை ஏமாற்றிப் பறிக்க மன்றிப் படுபொய்பேசி அழிவழாக்காடு கின்றனர்! எத்தனை பேர் தமக்கு ஆகாதவர்களை ஆள்விட்டு அடித்துக்கொல்கின்றனர்! எத்தனைபேர் நோய்வாய்ப் பட்டுப் புழுத்த அழுகி நாறிக் கிடக்கின்றனர்! எத்தனைபேர் கல்வியறிவு சிறிதும் இல்லாதவர்களாய் அறியாமைச் சேற்றில் அமிழ்ந்திக் கிடக்கின்றனர்! எத்தனைபேர் கடவுள் இல்லையென ‘நாத்திகம்’ பேசி நாத்தழும்பேறி நிற்கின்றனர்! எத்தனை பேர் எசக்கி, மாரி, வீரன், கறுப்பன் முதலான பேய்களை வணங்கி அவற்றிற்கு எண்ணிறந்த ஆடு, கோழிகளை வெட்டுகின்றனர்! இங்ஙனமே இன்னும் போலிச் சைவர்களின் இடையே நடைபெறும் அடாத சயல்களையெல்லாம் எடுத்துரைக்கப்படின் இவ்வேடு இட ங்காணாது. இத்தகையயோரான போலிச்சைவர்

தம்மைத்தாமே உயர்ந்த சாதியாராகச் சொல்லிக்கொண்டு தம்மில் இறுமாப்புற்றுத், தாந்தாமே கூடிக்களித்தால், அதனைக் கண்ட உயர்ந்த அறிவினர் அவரையும் அவர் சொல்லையும் ஒருபொருட்டாக மதிப்பரோ! 'சைவர்’ என்னுஞ் சொல்லுக்கு ஏற்பத் தாம் அருளொழுக்கத்திலும், சிவநேயத்திலும், அடியார் பணியிலுந் தலைசிறந்து நிற்பதோடு, தம்மோடொத்த ஏனை மக்களையுந் தமது அருளொழுக்கத் திற்றிருப்பி அவரோடு அளவளாவி, அவ்வாற்றாற் சைவவொழுக்கத்தை எங்கும் பரவச் செய்யினன்றோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/180&oldid=1591848" இலிருந்து மீள்விக்கப்பட்டது