உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் - 29

ல்

மூட்டைகளை இந்நிலவுலகத்தில் வேறெங்குங் காண் இயலாது. தமக்குள் ஒருவரை யொருவர் தாழ்வாக நினைந்து, போலி மேலோர் போலிக் கீழோரைக் கொடுமையாக நடத்துதலுக்குத் தண்டனையாக வன்றோ, எல்லார்க்குந் தந்தையான கடவுள் நம் இந்து மக்களைச் சென்ற எழுநூறு ஆண்டுகளுக்குமேலாக அயல் நாட்டவர் படையெடுப்பிற் படுத்துத் துன்புறுத்தியும், அவரது ஆட்சியின் கீழ் வைத்துத் திருத்தியும் வருகின்றது. தன் புதல்வர்களுள் எளியாரை வலியார் காடுமைப் படுத்துதல் கண்டு, பேர்இரக்கமுடையனாகிய இறைவன், நம் இந்துமக்களை அயலவரால் எவ்வளவோ திருத்தி வந்தும், நம்மவர்கட்கு இன்னும் நல்லுணர்வும் அன்பும் ஒற்றுமையும் வந்த பாடில்லையே! எழுநூறு ஆண்டுகளுக்கு முற்றொட்டுத் துலுக்கர்கள் படையெடுத்துவந்து நம்மனோரைச் சின்ன பின்னமாய் வெட்டி வீழ்த்தியும், பொருள்களைச் சூறையாடியும், பெண்மக்களைக் கற்பழித்தும், ஊர்களைக் கொளுத்தியும், திருக்கோயில்களை இடித்தும் வருத்தி வந்தக்கால் நம்மனோர்தம் சாதிவேற்றுமைகள் எங்கிருந்தன? அவை எல்லாம் பஞ்சாய்ப் பறந்தொழிந்தனவல்லவோ? 'தைமூர் அமீர்' என்னுந் துலுக்கமன்னன் கிபி 1398 இல் வடநாட்டிற் படையெடுத்து வந்த ஞான்று ‘துலம்பா’ என்னும் ஊரிலிருந்த நம் இந்துக் குடிமக்களைச் சின்னபின்னமாய் வெட்டி வீழ்த்தி, எஞ்சினோரை அடிமைப்படுத்தினான்! பின்னும் ஒருகால் நம்மனோரில் நூறாயிரம் பேரைக் குருதியொழுகக் கொன்றான்; டில்லி நகரை ஐந்துநாள் வரையிற் கொள்ளையிட்டான்; அப்போது எண்ணிறந்த நம் பெண்மக்களைச் சிறை பிடித்தான்'. அக் காலம்முதல் நம்மனோரில் எத்தனைகோடி பேர் துலுக்கராயினர்! எத்தனை யாயிரம்பேர் வறுமைப்பட்டுக் கீழ்ச்சாதியாரா யினர்! “அடித்தவனுக்கு ஆமுடையாள், பிடித்தவனுக்குப் பெண்டாட்டி” என்றபடி நம் பெண்மக்களில் எத்தனை யாயிரம்பேர் துலுக்கர் கையிற் சிக்கிமீண்டவர்கள்! அத்துலுக்க அரசர்களால்நேர்ந்த குழப்பங்களின் இடையே, நம் இந்து அரசர்களும், அவர்களின் கீழ்த் தலைமை சலுத்தினவர்களும், ஏனைச் செல்வர்களும், ஆள்வலிமை படைத்தவர்களும் செய்துவந்த தகுதியற்ற கொடுஞ் செயல்களுஞ் சொல்லுக்கு அடங்கா; அவர்களால் துன்புற்றுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/183&oldid=1591851" இலிருந்து மீள்விக்கப்பட்டது