உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

165

ச்

சைவரென இறுமாப்புடன் சொல்லிக்கொள்ளா நிற்கையில், மற்றைச் சாதியாரிலிருந்து இவ் வடையாளங்கள் எல்லாம் முற்றும் உடையராய் வரும் புனிதரை 'உண்மைச் சைவர்’ எனக்கொண்டு அவருடன் உண்ணல் கலத்தல்களைச் செய்தலாற் போதருங் குற்றம் என்னை? பிறசாதியாரிற் சைவநலங்கள் சிலவற்றோடு பெருஞ்செல்வமும் உடையார் இருந்தால், அவருடன் ஏதொரு வேற்றுமையும் பாராமல் உண்ணல் கலத்தல்களைச் செய்யும் சைவர்களைப் பாராதார் யார்? பிற சாதியார்களிற் செல்வம் மிகுந்தோர் எத்தனையோ பெயர் தஞ்சாதியை விடுத்துச் சைவ குலத்தில் எளிதாகப் புகுந்து கலந்துவிடுகின்றனர். “பணம் பந்தியிலே குலங் குப்பையிலே” என்னும் பழமொழியும் இவ்வாறு நேருஞ் சாதிக்கலப்புகளையே உணர்த்தாநிற்கின்றது. சைவகுலத்தில் கலப்புகள் நேர்கின்றனவென்று நினைத்தல் வேண்டாம். எல்லாச் சாதியாரிலும் இவை போன்ற கலப்புகள் நிகழ்ந்துகொண்டே போகின்றன. இப்போதுஎல்லாக் குலத்தினரிலும் மேற்பட்ட குலத்தினராகக் கருதப்படும் பார்ப்பனருங்கூடத், தம்மினும் மிகத் தாழ்நத வராகக் கருதப்படுஞ் சாதியாரிற் செல்வமுங் கல்வியும் முதலான நலங்களுடையார் விரும்பினால் அவர்கட்குத் தம் பெண் மக்களை மனைவியராக வாழ்க்கைப்படுத்துகின்றனர்; அவர்கள் பாற் பெண்மக்களிருந்தால் அவர்களைத் தாமும் மணம் முடித்துக் கொள்கின்றனர். இங்ஙனமெல்லாம் பிறசாதியாரிற் செல்வம் மிக்கார்பால் ஒருவகையாகவும், சல்வங் குறைந்தார்பாற், பிறிதொரு வகையாகவும் நடக்கும் போலிச் சைவரின் வஞ்சவொழுக்கந் தீயினுங் கொடியதா மென்க.

மட்டுமே இத்தகைய

இன்னும், பிறசாதியாரிற் றாழ்ந்தகுலத்தவராகத் தம்மாற் கருதப்பட்ட வகுப்பினர் சிலரைத் தென்னாட்டுத் திருக்கோயில் களினுள் நுழையவிடாத போலிச்சைவரின் புல்லிய செய்கை யால், எத்துணைப் பெருந்தீங்குகள் நிகழவிருக்கின்றனவோ என்பதை நினைக்க எம்நெஞ்சம் நடுங்குகின்றது! இத்தடையால் இதுவரையில் நிகழ்ந்த தீமைகட்கே அளவில்லை. எல்லா மக்களையுந் தோற்றுவித்த இறைவனாகிய தம் அப்பன் அமர்ந்திருக்கும் பொது இடமாகிய கோயிலிற் சென்று மக்கள் எல்லாரும் மனங் கரைந்து வணங்கவேண்டியவரா யிருக்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/190&oldid=1591859" இலிருந்து மீள்விக்கப்பட்டது