உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

  • மறைமலையம் -29

பெறல்வேண்டியோ அவ் வேழைகளை இங்ஙனமெல்லாங் காடுமைப்படுத்து கின்றனர்? அறிவுடையோர் விரும்பாததைச் செய்தலின், அப்போலிகட்கு இம்மையில் இகழ்ச்சியே யல்லாமற் புகழ்ச்சியில்லை. இறைவன் திருவுள்ளத்திற்கு ஆகாததைச் செய்தலின் அவர்கட்கு மறுமையிலும் பாவமேயல்லாற் புண்ணியமும் இல்லை. இவ்வாறு இம்மை மறுமை யிரண்டிலுந் தமக்கத் தீமையேதரும் இக்கொடுஞ் சயலைப் போலிச்சைவர் உடனேநீக்கி, அனைவரையுஞ் சாதி வேற்றுமை பாராமற் கோயிலினுட் போகவிட்டு, அறிவுடை யோர் நன்கு மதிப்பையும் இறைவனது அருளையும் பெறக்கடவராக!

வர்கள் அவ்வாறு செய்யாதொழியின் நம் அருளாள ரான ஆங்கில அரசரே அனைவருந் திருக்கோயிலினுட் புக விடைதரும்நாள் விரைவில்வரும். அப்போது இப்போலிச் சைவர்கள் தம்மால் ஆவதொன்றுமின்றிச் செயலற்று எல்லாராலும் இழிக்கப்பட்டு நிற்பர். பாருங்கள்! மலையாளத் திலுள்ள வைக்கத்தில் தாழ்ந்த சாதியாரைத் தெருவிற் செல்லவிடோமென்று அங்குள்ள போலி மேற்சாதியார் எவ்வளவு விடாப்பிடியாய் நின்றனர்! மலையாள அரசர் வாளா இருக்கும் வரையில், அப்போலி மேலோர் எவ்வளவு இறுமாப்புடன் அறிவுடையோர் சொல்லைக் கேளாமல் ழைவகுப்பினரைத் துரத்தித் தலைவிரித்தாடினர்! ஆனால், இப்போது மலையாள அரசை ஏற்ற அருள் அரசியர் தமது திருவுளமிரங்கித் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எல்லாருந் தமது நாட்டின் கண் உள்ள தெருக்களெல்லாவற்றிலுந் தடையின்றிச் செல்லலாம் என்று கட்டளை பிறப்பித்தபின்னர் அம்மேற் சாதிப் போலிகள் தம் செயல்அவிந்து இப்போது எவ்வளவு இழிக்கத்தக்க நிலையி லிருக்கின்றனர்! இத்தகைய நிலை வருதற்கு முன்னமே அவர்கள் தாமாகவே எல்லாரையுந் தாமிருக்குந் தெருக்களிற் செல்லவிட்டிருப்பர்களானால், அவர்களது நற்செய சயலை உலகம் எவ்வளவு புகழ்ந்து கொண்டாடியிருக்கும்! திருநெல்வேலியிலுள்ள சைவரும் பார்ப்பனரும் இப்போதே எல்லாவகுப்பினரையும் உயர்வு தாழ்வு கருதாது திருக்கோயில் களினுட் செல்லவிடுகுவ ராயின், அவர்களது அவ்விரக்கச் செயலை உலகம் மீக்கூறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/193&oldid=1591862" இலிருந்து மீள்விக்கப்பட்டது