உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம் 29 -

இனிப், பிறசாதியாரிலிருந்து தூயராய் வருவார் கடைப்பிடியாய்ச் செயற்பாலதும் ஒன்றுண்டு. இழிந்தகுடி ஒன்றிற் பிறந்தோர் அதற்குரிய இழிந்த தன்மைகளை விட்டுத் தூயராய் வரும்போது, தம்மை மீண்டும் அவ்விழிந்த குடிக்கு உரிய பெயராற்கூறித் தம்மைத்தாமே தாழ்வு படுத்திக்கொள்ளல் ஆகாது. ஒரு தூயவர் தம்மைத்தாமே உயர்த்திக்கொள்ள வழிதேடவேண்டுமே யல்லாமற், பிறர் தம்மை உயர்த்துவார்

என்று நம்பியிருத்தலாகாது. ஏனெனில், நம்மனோர்

சக்கையைப் பிடித்துச் சாற்றை ஒழுகவிடும் பன்னாடையைப் போல்வர்; உயர்ந்தார் ஒருவர் பால் உள்ள குற்றங்களை ஆராய்ந்து அவற்றையே பேசும் நீரர் அல்லாமல், அவர்பால் உள்ள உயர்ந்த நலங்கைப் பேசும் இயல்பினர் அல்லர். ஆதலால், இத்தகைய தீய மக்களிடையே தூயராய் உயர்வார் தமது இழிகுடிப் பிறப்பையுரையாது, தம்மைச் சைவர் எனவும் பார்ப்பனர் எனவுங் கூறி யொழுகுதல்வேண்டும்; தம்மோடு உடனிருந்து உணவுகொள்ளாதார் வீட்டில் தாமும் உணவெடுத்தல் ஆகாது, இம்முறையை விடாப்பிடியாய்க் காண்டு ஒழுகினாற்றான் கீழோரில் தூயராய் வருவோர் உயரக்கூடும் இவ்வாறு நாளடைவிற் செய்தே பார்ப்பனருஞ் சைவரும் உயர்ந்தனர். இம் முறையைக் கைப்பற்றித் தூயராவார் எல்லாருந் தாமும் ஒருமையுற்றுப், பிறர் எல்லாரையுந் தூயராக்கி ஒருமைப்படுத்திச், சாதிவேற்றுமைகளை அறவே யொழித்து எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளாகிய தந்தைக்கு இனிய புதல்வராய் இனிது வாழ்வாராக!

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும் முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/197&oldid=1591866" இலிருந்து மீள்விக்கப்பட்டது