உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

  • மறைமலையம் -29

வாழ்கையும் பண்டுதொட்டு வேளாளர் ஒருவர்க்கே உரியவாய் வருதலுந் தெற்றென விளங்கா நிற்கும்.

இனிப், பழமைக் காலந்தொட்டே இரப்போராகிய பார்ப்பனச் சுற்றத்தையும், உலகத்தைப் புரப்போராகிய அரசரையுந் தமது வேளாண் முயற்சியிலிருந்தும் வேளாளர்கள் உண்டாக்கிவந்தனரென்பது சிலப்பதிகாரத்து நாடுகாண்

காதையில்,

"பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்"

(148 - 150)

என்று ஆசிரியர் இளங்கோவடிகள் கூறியவாற்றால் நன்கு புலப்படும்.

அதுவேயுமன்றித் தம்முள் நுண்ணறிவாற் சிறந்தாரை அறிவு நூல் ஓதுதற்குந் திருக்கோயில்களிற் கடவுள் வழிபாடு ஆற்றுதற்கும் ஒரு வகுப்பினராகப் பழைய நாளிலிருந்தே பிரித்துவைத்தார்கள்; இவர்களே தமிழ்நாட்டு அந்தணராவர்; இவர் தம்மை இக்காலத்தார் ‘ஆதிசைவர்’ என்றுங், ‘குருக்கள்’, ‘பட்டர்”, ‘நம்பியார்' என்றும் அழைப்பர். தமிழ்நாட்டின்கண் உள்ள பழைய திருக்கோயில்களெல்லாந் தமிழ் மக்களால் அமைக்கப்பட்டுத் தமிழர்க்கே உரியவாகி வருதலால் தமிழ வேளாளரினின்றும் அந்தணராகப் பிரித்துவைக்கப்பட்ட இவ்வா திசைவ வகுப்பாரை யன்றி, ஆரியப் பார்ப்பனர் எவரும் இத்திருக்கோயிலிலுள்ள திருவுருங்களைத் தொட்டு வழிபாடு செய்தற்கு இடம்பெறாராயினர். இப்பண்டை வழக்கம் இன்று காறும் நடைபெற்று வருதல் காண்க. பழையநாளில் ஆரியப் பார்ப்பனர் ஆ எருது முதலியவற்றைக் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்று வந்தமையின், அவர் தமிழ்நாட்டுக் கோயில்களுள் நுழைதற்கும் றைவன் திருவுருவத்தைத் தொடுதற்குந் தகுதியிலராக ஒதுக்கி வைக்கப்பட்டனர். காலைத் தொழில் புலைத்தொழில்களைக் கைக்கொண்டு ஒழுகினமை பற்றி வேளாளரால் தாழ்த்தப்பட்ட ஆரியப் பார்ப்பனர் பையப் பைய அவ்விழி தொழில்களைக் கைவிட்டுத் தம்மைத்தாமே உயர்த்துப் பேசிக்கொண்டு, தம்மைத் தாழ்த்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/219&oldid=1591888" இலிருந்து மீள்விக்கப்பட்டது