உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

199

இவர்கள் தனிமுதன்மையுடையராயிருந்து எல்லார்க்குந் தம் பொருள்களை இரக்கத்தானும் அன்பானும் ஈந்து தம்மால் நிறுத்தப்பட்ட பதினெண் வகுப்பினர்பாலுந் தாம் ஏவல்வாங்கி வருதலன்றித் தாம் எவர்க்குங் குற்றேவல் செய்யாமை 'இரவார் இரப்பார்க்கொன் றீவர்’ “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல்பவர்” என்னும் தெய்வத் திருவள்ளுவர் திருக்குறட்பாட்டுகளாலும், “இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும், உழவிடை விளைப்போர்” எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அருளிச்செய்த திருமொழியானும், 'வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந் தாளாளர், இன்மையாற் சென்றிரந்தார்க்கு இல்லையென்னாது ஈந்து உவக்குந், தன்மையார்' எனத் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய அருளுரையானும் பெறப்படுமாற்றானும் இவரைச் சூத்திரரென்னும் இழித்துரை யின்பாற் படுத்து வழங்கல் ஒரு சிறிதம் அடாதென்க.

இன்னும் பண்டைக்காலந் தொட்டுச் சைவ வேளாளர்கள் கொலையும் புலாலுணவும் மறுத்துச் சிவ வழிபாடு இயற்றி வருகின்றமையின், புலாலுண்டுஞ் சிவவழிபாடு செய்யாமலும் இருக்கும் எந்த வகுப்பினரிடத்தும் உடன் உண்ணுதலும் உ ன் கலத்தலுஞ் செய்யாமலே வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் எல்லாச் சாதியார்களும் சைவ வேளாளர் வீட்டில் உணவெடுப்பர்; சைவ வேளாளர் வேறெந்தச் சாதியார் வீட்டிலும் உணவெடார். ஆரியப் பார்ப்பனர் பழைய நாளிற் புலாலுணவு கொள்வாரா யிருந்தமையின், அவர்கள் வேளாளராகிய தம்மைக் கண்டு புலால் மறுத்த பின்னும் வேளாளர் அவர்கள் பால் உணவு கொள்ளாமலே இருந்தனர். சிவதீக்கை பெற்ற சைவ வேளாளர் இந்நாளிலும் ஆரியப் பார்ப்பனர் வீட்டில் உணவெடார்.

இங்ஙனமாகச், சைவ வேளாளர் எல்லா வகையானும் உயர்ந்தாராய், ஆரியர்பால் உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல் அவர் தம்மை புறத்தொதுக்கி வந்தமை கண்ட ஆரியப் பார்ப்பனர் தாமும் அச் சைவ வேளாளரைத் தாழ்த்துதற் பொருட்டுத் தம் முன்னோர் எழுதிவைத்த மனு முதுலான மிருதி நூல்கட்கும் மாறாகச் ‘சூத்திரர்’ என்னும் இழிந்தபெயரை வேளாளர்க்கு வைத்து வழங்கத் தொடங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/224&oldid=1591893" இலிருந்து மீள்விக்கப்பட்டது