உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேளாளர் நாகரிகம்

201

நாடோறும் அவர்களை யடுத்திருக்கிற சூத்திரன் மேலான சாதியானாவன்!”

என்று சூத்திரன் ஊழியத்தொழில் ஒன்றற்கே உரியனாதலை அம் மனுதர்ம நூல் வலியுறுத்துக் கூறுகின்றது. ஆரியர்க்குரிய தரும நூல்களில் மிகச் சிறந்ததாகிய மனுதர்ம நூலின்படி பார்த்தாலும், ஆன்நிரை ஓம்பல் உழவும் வாணிகமும் நடாத்தல் என்னும் இத்தொழில்களையன்றி, எவர்க்கும் ஊழியஞ்செய்யுந் தொழிலினை மேற்கொள்ளாமல் தொன்று தொட்டு அறவொழுக்கத் தின்கண் வாழ்ந்து வருபவரான வேளாளரை வைசியரெனக் கூறலாமேயன்றிச் சூத்திரரெனக் கூறுதல் ஒரு சிறிதும் அடாது.வேளாளர்க்கு ஏவல்புரியும் ஏனைப் பதினெண் வகுப்பினரைக்கூட அவ்வாறு சூத்திரரெனக் கூறுதல் பொருத்தமாகாது.

இனி, வடமொழியில் எல்லார்க்கும் பொது நூலாகிய அமர நிகண்டிலும் வைசிய வர்க்கத்தைச் சொல்லுமிடத்து உழவு வாணிகம் ஆனிரை ஓம்பல் என்னும் மூன்று தொழிற்கும் உரியார் வைசியரெனக் கூறப்பட்டிருக்கின்றனர்.சூத்திரவர்க்கத்தைச் சொல்லுமிடத்துக், குயவர், கொற்றர், கைக்கோளர், துன்னர், கொல்லர், தட்டார், தச்சர், ஓவியர், நாவிதர், வண்ணார், கூத்தர், பாணர், வேடர், கள்விலைஞர், ஊன்விளைஞர், ஏவலர், இழிகுலத்தோர், மடவோர் என்னும் இவர்களே சூத்திர வகுப்பில் அடக்கிக் கூறப்பட்டிருக்கின்றனர். இவ் வடமொழிப் பொது நூலின்படி பார்த்தாலும், உயர்ந்தோருந் தலைவருங் காணியாளருமாகிய வேளாளரை இழிந்தோர்க்குரிய சூத்திரப் பெயராற் கூறுதல் பெரிதுங் குற்றமுடைத்தாதல் காண்க.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/226&oldid=1591895" இலிருந்து மீள்விக்கப்பட்டது