உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

66

மறைமலையம் -29

இந்தச் சோமபானத் துளிகளால் உவந்து இந்திரன் தாசியர்களைக் கலைத்துத் துரத்த, நாங்கள், அவர்களின் பகைமைக்குத் தப்பிப்பிழைத்து, ஏராளமான உணவைப் பெறுவேமாக."

66

‘ஓ! இந்திரனே, ஏராளமான செல்வத்தையும் உணவையும் பெற்று, மிகச்சிறந்த வலிமையினால் நாங்கள் வானளவும் உயர்ந்து விளங்குக.

66

""

ரிஜிஸவான் அவர்களைச் சூழ்ந்து முற்றுமையிட்ட, ஞான்று, நீ சிறிதும் விட்டுக்கொடாமல் வங்கிரிதனுடைய நூறுகோட்டைகளை நுறுக்கியிருக்கின்றனை.’'

992

இவ்விருக்குவேதப் பாட்டுகளில் ஆரியர்கள் இந்திரனை நோக்கிக் கூறும் வேண்டுகோளுரைகளால், தம் காலந்திருந்த வேளாண்மக்களையும் அவர்க்குத் தலைவரான வேளிர் அரசர் களையும் நிரம்பக் கொடுமையாக இகழ்ந்துரைத்தனராயினும், ஆரியர் அவர்களின் பெருங்செல்வத்தையும் நாகரிக அரச வாழ்க்கையையும் பொறாமையால் உடன் உயர்த்துக் கூறுதலுங் காண்க. ஆரியர்களாகிய தம்மையுந் தம்மால் தாசியரென வழங்கப்பட்ட தமிழரையும் பிரித்துக்காணுமாறு அவ் விந்திரனை வேண்டிக் கோடலும் நினைவுகூரற்பாற்று.இன்னுந் தமிழராகிய பிறர் இனிது வாழ்தலைக் காண இவ்வாரியர் மனம்பொறாது எரியும் இயல்பினர் என்பதற்குக்,

“குயவன் என்பவனின் மனைவியர் இருவரும் பாலிலே தலைமுழுகின்றனரே! அவர்கள் சிபா யாற்றின் ஆழத்திலே

அமிழ்ந்தி இறவார்களா.

993

என்னும் அவர்களது கொடிய வேண்டுகோளுரையே

சான்றாம்.

66

“அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார், வழுக்கியும் கேடீன் பது

என்னுந் தெய்வத் திருக்குறளின்படி, பெருஞ் செல்வத்தில் வாழ்ந்த இத் தமிழ் நன்மக்களை வயிறெரிந்து வைத ஆரியர் உண்ணச் சோறும் உடுக்கச் சீரிய துணியும் இருக்கச் சிறந்த இல்லமும் இன்றி மிக மிடிப்பட்டுக் காலங்கழித்தனரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/251&oldid=1591936" இலிருந்து மீள்விக்கப்பட்டது