உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மறைமலையம் - 29

அங்ஙனம் அவற்றைக் கொள்ளாத தமிழர்களிடமிருந்து கற்றுக் கொண்டார்க ளென்பதுந், தமிழர்களில் ஒவ்வொரு நிலத்து மக்கள் வணங்கிய வேந்தனும், வருணனும், ஆரியர் எல்லாரும் வணங்கிய இந்திரனும் வருணனுந் தம்மிற் பெரிதும் வேறுபாடுடையராயிருப்ப, அவ்விருவரும் ஒருதிறத்தினரே பகுத்துணர்வில்லாதார்

யாமெனக்

கூறுதலும்

போலியுரையாமென்று தெளிக.

கூறும்

இனி, ஆரியர் தமிழரோடு கலந்தபின் அவர்க்குரிய இந்திர வருண வழிபாடுகளைத் தாம் கற்றுந், தமக்குரிய உருத்திர வழிபாட்டை அவர்க்குக் கற்றுக் கொடுத்தும் வந்தது உண்மை யாயின், தமிழர் இருந்த இவ்விந்திய நாட்டுக்குள் வராமல், அதற்குப் புறம்பே தம்மினத் தவரான பாரசிகர் கிரேக்கர் முதலியோருடன் ஆரியர் அயல் நாடுகளிற் குடியிருந்த அக்காலத்தில் அவரெல்லாருமாய்ச் செய்தது உருத்திர வழிபாடாயிருத்தல் வேண்டும். தமிழர்க்குரியதாயின் இந்திரவருண வழிபாட்டைப் புறம்பேயிருந்த அவ்வாரிய வகுப்பினர் அந் நாளிற் சிறிதும் அறியாராயிருத்தலும் வேண்டும். மற்று, அவ் வாரிய வகுப்பினரான பண்டைப் பாரசிகரின் அவஸ்தா என்னும் நூலையுங், கிரேக்கருடைய பழைய நூல்களையும் ஆராய்ந்து பார்ப்பின் அவற்றின்கண் உருத்திர வழிபாடு ஒருசிறிதுங் காணப்படாமையின், அவ்வழிபாடு பண்டை யாரியர்க்கே உரியதென்பார் உரை பெரும் பிழை பாட்டுரையேயாம். இன்னும், இந்திரனுக்கும் வருணனுக்கும் உரிய பெயர்களாக இருக்குவேதத்தில் வழங்கும் 'விருத்திரகன்’ அசுரன்' என்னுஞ் சொற்கள், பாரசிகர்க்குரிய பழைய வேதமாகிய அவஸ்தா என்னும் நூலிற் காணப் படுவதோடு, 'வருணன்' என்னுஞ் சொல்லுஞ் சிறிது திரிபோடு கிரேக்கருடைய பழைய நூல்களிலும் வழங்குகின்றது. ங்ஙனமே ம ஆரியரெல்லார்க்கும் பொதுவாக உரிய தய்வங்கள், பழக்க வழக்கங்கள் முதலியவற்றின் பெயர்கள் இருக்குவேத ஆரியர்க்கும் பாரசிகர் முதலான பழைய ஆரியவகுப்பினர்க்கும் பொதுவாயிருத்தல் கண்டுகொள்க. அவையெல்லாம் ஈண்டெடுத்துரைப்பின் இது மிக விரியும். இங்கே காட்டினமை கொண்டு இருக்குவேதத்திற் சொல்லப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/265&oldid=1591964" இலிருந்து மீள்விக்கப்பட்டது