உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

மறைமலையம் - 29

ஒழுங்குபடுத்திய ஞான்று தமக்குரிய அக் கொள்கையை அவ்வாரிய நூலின் இடையே புகுத்தி வைத்தனர். ஆரியர் பல பெயர்களான் வணங்குஞ் சிறு தெய்வங்கள் முதற் கடவுள் ஆகார். எவர் எவ்வகைப் பெயரில் 6 எத் தெய்வத்தை வணங்கினும், அத்தெய்வங்கள் பிறந்திருந்து மாய்வன வாதலால் அவை அவர் வழிபாட்டை ஏன்று கொண்டு அவர்க்கு அருள்புரியமாட்டா; எல்லாம் வல்ல முழுமுதற் சிவம் ஒன்றே அவரவர் அவ்வத்தெய்வத்திற் செய்யும் வழிபாட்டை ஏன்று கொண்டு அவரவர்க் கேற்ற பரிசாகத் தனது அருளை வழங்கி அவரை மேன்மேல் உயர்த்தும் என்பதே தமிழ்ச் சான்றோர் கொள்கையாம். இது,

66

“விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாமே”

எனத், திருநாவுக்கரசு நாயனாரும்,

“அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வலர் பொருளாய் வேறாங், குறியது வுடைத்தாய்”

எனவும்,

“யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்

வேதனைப் படும்இ றக்கும் பிறக்கும்மேல் விளையுஞ் செய்யும்

ஆதலால் இவை இலாதான் அறிந்தருள் செய்வ னன்றே”

எனவும் அருணந்தி சிவாசிரியரும் ஓதுமாற்றால் நன்கு தெளியப்படும். இவ் வுண்மையையே இக் காலத்திருந்த இராமலிங்க அடிகளும்

“அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர் என்பெயரும்

அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே”

என்று ஓதுதல் காண்க. எல்லா உயிர்களும் அவனை இன்றி இயங்காமையானும், அவன் எல்லா உயிர்களிலும் பிரிவின்றிக் கலந்து நிற்றலானும் அம் முறைபற்றி எல்லா உயிர்ப்பெயரும் இறைவற்கு உரியனவாகக் கூறப்பட்டனவே யல்லாமல், அங்ஙனங் கூறப்பட்ட அப்பெயர்கட்குரிய சிற்றுயிர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/279&oldid=1591992" இலிருந்து மீள்விக்கப்பட்டது